பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

Written By:

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஷ்மோ காரின் புதிய வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்போர்ட்லைன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய வேரியண்ட் ரூ.39.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

இந்த காரில் 184 எச்பி பவரையும், 380 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் ட்வின்பவர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

லிட்டருக்கு 19.59 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று தெரிவிக்கிறது. இந்த கார் Eco, Pro, Sport மற்றும் Sport+ என்று 4 விதமான டிரைவிங் முறைகளில் ஓட்டுனர் மாற்றிக் கொள்ளலாம்.

சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலையில்தான் இந்த புதிய கார் மாடலும் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைக்கும்.

English summary
BMW India has launched its 3 Series Gran Turismo Sport Line in the country. This model has been locally produced at their Chennai facility and is now available across the country.
Story first published: Wednesday, June 10, 2015, 17:25 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos