பிப்.18ல் விற்பனைக்கு வருகிறது புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார்!

Written By:

அடுத்த மாதம் 18ந் தேதி இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியர்களுக்கு தரிசனம் கொடுத்த இந்த கார் மாடலுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதிக மைலேஜ் தரும் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் என்பதுடன், பல்வேறு நவீன தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் மற்றும் கட்டமைப்புடன் இந்த கார் வர இருக்கிறது. அடுத்த மாதம் மும்பையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்த புதிய ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரை பிஎம்டபிள்யூ இந்தியாவில் முரைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

 இந்தியாவுக்கு புதிய ரகம்

இந்தியாவுக்கு புதிய ரகம்

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் மாடலில் 231 பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. தவிர்த்து 131 பிஎஸ் பவரை அளிக்கும் எலக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது.

 செயல்திறன்

செயல்திறன்

இந்த புதிய ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரின் பெட்ரோல் எஞ்சின் 0 -100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் கடந்து விடும் வல்லமை கொண்டது. இதன் எலக்ட்ரிக் மோட்டார்கள் மணிக்கு 120 கிமீ வேகம் வரை காரை செலுத்தக்கூடிய திறன் வாய்ந்தவை.

பேட்டரி ரேஞ்ச்

பேட்டரி ரேஞ்ச்

பெட்ரோல் எஞ்சினை ஆஃப் செய்துவிட்டால், பேட்டரி சார்ஜில் 37 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

மைலேஜ்

மைலேஜ்

இந்த ஹைபிரிட் கார் ஐரோப்பிய கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 48 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் 20 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.1.5 கோடி விலையில் இந்தியாவில் இந்த புதிய கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய மாடல் தவிர்த்து பிஎம்டபிள்யூவின் புதிய ஐ3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரும் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

 
English summary
BMW India will launch the highly anticipated i8 hybrid supercar on February 18. The launch will take place in Mumbai. Stay tuned for latest updates.
Story first published: Friday, January 30, 2015, 11:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark