பிஎம்டபிள்யூ எம்6 க்ரான் கூபே கார் அறிமுகம் -

By Saravana

இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ எம்6 க்ரான் கூபே கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மும்பையில் பிஎம்டபிள்யூ திறந்திருக்கும் எம் ஸ்டூடியோவில் வைத்து இந்த புதிய கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

BMW M6 Gran Coupe

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க 'எம்' வரிசையில் ஓர் புதிய மாடலாக வந்திருக்கிறது.

ரூ.1.17 கோடி மஹாராஷ்டிர எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 8 சிலிண்டர்கள் கொண்ட 4,395சிசி டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 560 எச்பி பவரையும், 680 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த காரில் 7 ஸ்பீடு எம் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மூலமாக ஆற்றல் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது.

அதிசெயல்திறன் மிக்க இந்த சொகுசு காரில் ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன.

அதில், 6 ஏர்பேக்குகள், பிஎம்டபிளயூ ஐ டிரைவ் சிஸ்டம், ஹெட் அப் டிஸ்ப்ளே, அட்டென்ஷன் அசிஸ்ட் உள்ளிட்டவை முக்கிய பாதுகாப்பு மற்றும் சிறப்பு தொழில்நுட்பங்களாக கூறலாம்.

இந்த காரில் இருக்கும் எஃபிசியன்ட் டைனமிக்ஸ் தொழில்நுட்பம் பயனாக லிட்டருக்கு 10.10 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மணிக்கு 250 கிமீ வேகம் வரை தொட வல்லது.

ஜெர்மனியில் உள்ள ஆலையிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். அதிசெயல்திறன் மிக்க சொகுசு கார்களை விரும்புவோர்க்கு இந்த கார் சரியான தேர்வாக அமையும்.

Most Read Articles
English summary
The all-new BMW M6 Gran Coupé launched in India on 1 October 2015 priced at INR 1,71 crore ex-showroom (Maharashtra). Powering the M6 Gran Coupé is an 8-cylinder, turbocharged 4,395cc petrol engine. The engine is capable of producing 560 horsepower and 680Nm of peak torque, and a top speed of 250 kph.
Story first published: Saturday, October 3, 2015, 12:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X