பிஎம்டபிள்யூவின் 2 புதிய பெர்ஃபார்மென்ஸ் கார்கள் அறிமுகம்!

Written By:

இந்தியாவில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்5 எம் மற்றும் எக்ஸ்6 எம் என்ற இரண்டு உயர்வகை செயல்திறன் கொண்ட சொகுசு எஸ்யூவி மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

இதற்கான நிகழ்ச்சி, சென்னையிலுள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் இன்று நடந்தது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி மாடல்களுக்கு போட்டியாக வந்திருக்கும் இந்த புதிய பெர்ஃபார்மென்ஸ் ரக கார்கள் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 எம் பிராண்டு மாடல்கள்

எம் பிராண்டு மாடல்கள்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களின் அடிப்படையில், அதிசக்திவாய்ந்த மாடல்கள் வெளியிடப்படும் எம் பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் ஏற்கனவே, எம்3, எம்4, எம்5 மற்றும் எம்6 கிரான் கூபே ஆகிய கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றன. இந்த வரிசையில், தற்போது எக்ஸ்5 எம் மற்றும் எக்ஸ்6 எம் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

எம் ஸ்டூடியோ

எம் ஸ்டூடியோ

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் ஸ்டூடியோ என்ற சிறப்பு ஷோரூம்கள் வாயிலாக இந்த புதிய மாடல்கள் விற்பனை செய்யப்படும். மும்பையில், சமீபத்தில் முதல் எம் ஸ்டூடியோவை பிஎம்டபிள்யூ நிறுவனம் திறந்திருக்கிறது. பிற நகரங்களிலும் விரைவில் எம் ஸ்டூடியோ திறக்கப்பட இருக்கிறது.

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் மற்றும் எக்ஸ்6 எம் கார் மாடல்களில், இரட்டை டர்போசார்ஜகள் உதவியுடன் இயங்கும் 4.4 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் இருக்கிறது. அதிகபட்சமாக 575 எச்பி பவரையும், 750 என்எம் டார்க்கையும் வழங்கும். 8 ஸ்பீடு எம் ஸ்டெப்ட்ரோனிக் கியர்பாக்ஸ் வழியாக அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் ஆற்றல் செலுத்தப்படுகிறது. இதே எஞ்சின்கள்தான் எம்5 மற்றும் எம்6 கிரான் கூபே கார்களிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

செயல்திறன்

செயல்திறன்

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் மற்றும் எக்ஸ்6 எம் கார்கள் 0- 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 4.2 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும், அத்துடன் மணிக்கு 250 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

அடாப்டிவ் ஹெட்லைட்டுகள், கேபினில் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவும், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் என ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

விலை

விலை

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம்: ரூ.1.55 கோடி

பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எம்: ரூ.1.60 கோடி

எக்ஸ்ஷோரூம் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரேஸ் டிராக்கில் அறிமுக விழா?

ரேஸ் டிராக்கில் அறிமுக விழா?

பொதுவாக, அதிக கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்ட எஸ்யூவி மாடல்களை ரேஸ் டிராக்கில் வைத்து சோதிப்பது சிறப்பாக இருக்காது என்பதால், நட்சத்திர ஓட்டல்கள், ஷோரூம்கள் அல்லது நிறுவனத்தின் பிரத்யேக அரங்கங்களில் வைத்து அறிமுகம் செய்வர். ஆனால், இந்த இரண்டு எஸ்யூவி கார்களிலும் இருக்கும் தொழில்நுட்ப சிறப்பு மூலமாக, ரேஸ் டிராக்கிலும் இவை சிறப்பாக இயங்கும் என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில்தான் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் வைத்து இந்த நிகழ்ச்சியை பிஎம்டபிள்யூ ஏற்பாடு செய்திருக்கிறது. மேலும், தற்போது இந்தியாவில் பல நிறுவனங்கள் ரேஸ் டிராக்கில் வைத்து கார்களை அறிமுகம் செய்வதும் வழக்கமான செயலாகிவிட்டது.

 
English summary
BMW has launched the X5M and X6M in India. The launch further strengthens BMWs M range in India. The X5M and the X6M are based on BMWs X5 and the X6 models that are already on sale in the country.
Story first published: Thursday, October 15, 2015, 13:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark