அடடே... ஆச்சரியத்தை அளிக்கும் டாப்- 8 கார் தொழில்நுட்பங்கள்!

Written By:

கார்களுக்கான தொழில்நுட்ப வளர்ச்சி வியக்க வைக்கும் வகையில் இருந்து வருகிறது. அடுத்த தலைமுறை கார் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி தானியங்கி கார்களின் ஆதிக்கத்தில் செல்லும் என்று எதிர்பார்ப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் வெளியான நவீன கார் தொழில்நுட்பங்களில் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் புதுமையான மற்றும் புதிய டாப் 8 தொழில்நுட்பங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

 01. மாறும் பின்புலம் கொண்ட மின்னணு திரை

01. மாறும் பின்புலம் கொண்ட மின்னணு திரை

காரின் வேகத்தை காட்டும் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் போன்ற தகவல்களை மின்னணு திரையில் பெறும் வசதி ஸ்கூட்டர் வரை வந்துவிட்டது. இதன் அடுத்தக்கட்ட தொழில்நுட்பம் அடாப்டிவ் டிஜிட்டல் டிஸ்ப்ளே எனப்படும் எஞ்சின் இயக்கத்துக்கு தகுந்தவாறு பின்னணி மற்றும் விளக்குகளின் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் மின்னணு திரைதான். உதாரணமாக, எக்கானமி எனப்படும் எரிபொருள் சேமிப்பு தரும் முறையில் எஞ்சினை இயக்கும்போது பச்சை வண்ண பின்னணியில் இதன் திரை இருக்கும். அதிக செயல்திறன் கொண்ட முறைக்கு எஞ்சினை மாற்றிவிட்டு செல்லும்போது, இதன் பின்புலம் சிவப்பு வண்ணத்திற்கு மாறிவிடும். இது காரை ஓட்டுபவருக்கு ஓர் புதிய உணர்வையும், எஞ்சின் இயக்கம் குறித்த ஓர் நேரடி புரிதலையும், எச்சரிக்கை எண்ணத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

02. தானியங்கி உள்பக்க கண்ணாடி

02. தானியங்கி உள்பக்க கண்ணாடி

உள்பக்கம் இருக்கும் கண்ணாடி இரவுவேளைகளில் பின்னால் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் ஒளியால் எதிரொலிக்கும். இதன் காரணமாக, ஓட்டுனருக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்ப்பதற்காக தானியங்கி முறையில் ஒளியை பிரதிபலிக்காத வகையில் மாறிக்கொள்ளும் தானியங்கி கண்ணாடிகள் இப்போது கார்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது வரும் பெரும்பாலான கார்களில் இந்த கண்ணாடி இருந்தாலும், அதனை ஓட்டுனர் மாற்ற வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த புதிய கண்ணாடி தானியங்கி முறையில் வண்ணம் மாறும். இந்த கண்ணாடியில் திசை காட்டும் கருவியும் இருக்கிறது. இதன்மூலம், கார் எந்த திசையில் செல்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

03. நொடியில் உங்களுக்கான இருக்கை அமைப்பு தயார்

03. நொடியில் உங்களுக்கான இருக்கை அமைப்பு தயார்

சொகுசு கார்களில் காரை ஓட்டுபவருக்கு தகுந்தவாறு இருக்கையின் உயரம் மற்றும் ஸ்டீயரிங்கிற்கு இடையிலான தூரம், சாய்மான கோணத்தை பொத்தான்களை அழுத்தி வசதியாக மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக, வீட்டில் உள்ளவர்களின் ஒவ்வொருக்கும் தகுந்தவாறு இருக்கை அமைப்பை மாற்றி வைத்துக் கொள்ள முடியும். ஓட்டுபவர் அவர் ஏற்கனவே பதிவு செய்த இருக்கை அமைப்பிற்கான எண்ணை அழுத்தினால் போதும், அவருக்கு ஏற்ற வகையில் இருக்கை அமைப்பு ஒரு சில நொடிகளில் மாறிவிடும். ஒவ்வொரு முறையும் இருக்கை அமைப்பை மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்.

04. சாலை விதிகள் பற்றிய எச்சரிக்கை

04. சாலை விதிகள் பற்றிய எச்சரிக்கை

சாலையின் முக்கிய எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் சாலை விதிகளை காரின் முன்னால் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மூலம் ஓட்டுனருக்கு தெரிவிக்கும் தொழில்நுட்பம். இதனை ஆங்கிலத்தில் RSI என்று சுருக்கமாக குறிப்பிடுகின்றனர். உதாரணத்திற்கு, சாலையின் வேக வரம்பு, முந்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதி ஆகியவற்றை இந்த தொழில்நுட்பம் மூலம் ஓட்டுனருக்கு தெரிவிக்கப்படும்.

 05. நவீன க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம்

05. நவீன க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம்

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஓட்டுனர் உதவியில்லாமல், சீரான வேகத்தில் காரை இயக்குவதற்கு க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் பயன்படுகிறது. இதன் மேம்பட்ட தொழில்நுட்பமாக தற்போது க்யூ அசிஸ்ட் வசதியுடன் கூடிய வருகிறது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல். இந்த க்யூ அசிஸ்ட் மூலம் முன்னால் செல்லும் வாகனத்திற்கும், உங்கள் காருக்கும் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் பதிவு செய்துவிட முடியும். அந்த இடைவெளிக்கு தகுந்தவாறு காரை இந்த க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் இயக்கிச் செல்லும்.

06.முன்பக்க கண்ணாடியில் தகவல் பெறும் வசதி

06.முன்பக்க கண்ணாடியில் தகவல் பெறும் வசதி

ஹெட் அப் டிஸ்ப்ளே எனப்படும் இந்த வசதி விலையுயர்ந்த ஆடம்பர கார்களில் வழங்கப்படுகிறது. விண்ட் ஷீல்டு எனப்படும் காரின் முன்புற கண்ணாடியில் காரின் வேகம் உள்ளிட்டத் தகவல்களை ஓட்டுனர் எளிதாக பார்த்துக் கொள்ள இந்த தொழில்நுட்பம் உதவி செய்கிறது. ஓட்டுனருக்கு பார்வையை மறைக்காத வகையில் தகவல்களை மின்னணு திரை மூலம் வழங்கும். காரை ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஓட்டுனர் கீழே குனிந்து மீட்டர் கன்சோலை பார்க்க வேண்டிய அவசியம் இராது. இதனால், விபத்துக்களை தவிர்க்க முடியும்.

 07. நவீன முகப்பு விளக்குகள்

07. நவீன முகப்பு விளக்குகள்

வளைவுகளில் கார் திரும்பும்போது முகப்பு விளக்குளின் ஒளிக்கற்றைகள் நேராக செல்லும். இதனால், வளைவுகளில் இருக்கும் பள்ளங்கள், பொருட்கள், பாதசாரிகள் மற்றும் வாகனங்களை ஓட்டுனர் பார்க்க இயலாத நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்த்து, கார் திரும்பும் திசையில் முகப்பு விளக்குகள் தானியங்கி முறையில் திரும்பி ஒளியை பாய்ச்சும் தொழில்நுட்பம்தான் இது. இப்போது பல கார்களில் இடம்பெற்று வருகிறது. இதனை அடாப்டிவ் ஹெட்லைட்ஸ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர்.

08. குறுக்கே வரும் பாதசாரிகளை கண்டறியும் நுட்பம்

08. குறுக்கே வரும் பாதசாரிகளை கண்டறியும் நுட்பம்

குறுக்கே பாதசாரிகள் அல்லது சைக்கிள் உள்ளிட்ட இதர வாகனங்கள் வரும்போது ஓட்டுனருக்கு எச்சரிக்கை கொடுக்கும் மிக நவீன தொழில்நுட்பம் இது. அதையும் மீறி ஓட்டுனர் கட்டுப்படுத்த தவறினால் காரின் தானியங்கி பிரேக் சிஸ்டம் செயல்பட்டு காரை நிறுத்திவிடும்.இதற்காக, முன்பக்க க்ரில், பின்புறத்தை காட்டும் கண்ணாடிகளின் பின்புறத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

09. சற்றே காத்திருங்கள்...

09. சற்றே காத்திருங்கள்...

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்த அடடே தொழில்நுட்பங்கள் அனைத்தும் உங்களது கார் அல்லது ஸ்கூட்டரில் கூட வந்துவிடலாம். ஆட்டோமொபைல் துறையின் அசாதரணமான தொழில்நுட்ப வளர்ச்சியும், சந்தைப் போட்டியும் இந்த நவீன தொழில்நுட்பங்களை நாம் பெறுவதற்கு அதிகம் காத்திருக்க வேண்டியிருக்காது என்று கூறலாம்.

 
English summary
New Car Features That Would Have Blown Your Mind In The Past.
Story first published: Friday, March 27, 2015, 11:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark