ஜனவரியில் கார் விற்பனை சிறிதளவு வளர்ச்சி!

Written By:

கடந்த டிசம்பர் மாதம் கார் விற்பனை சிறப்பாக அமைந்த நிலையில், கடந்த ஜனவரியில் கார் விற்பனை சிறிதளவு உயர்ந்தது.

வரிச்சலுகை ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியானத் தகவலால் கடந்த டிசம்பர் மாதம் கார் விற்பனை 15 சதவீதம் உயர்ந்தது.

Car Sales
 

இந்த நிலையில், கடந்த ஜனவரியில் கார் விற்பனை 3 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. கடந்த மாதம் மொத்தமாக 1.69 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளதாக சியாம் அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இருசக்கர வாகன விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லை. கடந்த மாதம் இருசக்கர வாகன விற்பனை 1.66 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

அதேநேரத்தில், மாருதி, ஹூண்டாய், ஹோண்டா, டொயோட்டா, நிசான் உள்ளிட்ட நிறுவனங்களின் கார் விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோக்ஸ்வேகன், ஃபியட் ஆகிய நிறுவனங்களின் விற்பனை சரிவையும் சந்தித்துள்ளன.

English summary
Car sales returned to a more realistic pace of growth in January, with less than a third of the country's 17 car manufacturers reporting an expansion. An anticipated withdrawal of excise duty benefits had inflated sales at almost all auto makers in the previous month. 
Story first published: Wednesday, February 11, 2015, 10:12 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark