எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே இந்தியாவில் ரிலீசாகிறது புதிய செவர்லே ஸ்பின்!

Written By:

எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே செவர்லே ஸ்பின் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு புதிய செவர்லே ஸ்பின் எம்பிவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையல், இந்தோனேஷிய ஆலையை மூடுவதற்கு ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.இதையடுத்து, இந்திய மார்க்கெட்டில் அதிக கவனம் செலுத்த அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதன்படி, புதிய மாடல்களை இந்தியாவில் களமிறக்க மார்க்கெட்டை வலுப்படுத்திக் கொள்ள திட்டமி்டுள்ளது.

என்ஜாய்க்கு மாற்று?

என்ஜாய்க்கு மாற்று?

செவர்லே என்ஜாய் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாத நிலையில், அந்த காரின் இடத்துக்கு சரியான மாடலாக செவர்லே ஸ்பின் எம்பிவியை நிலைநிறுத்த ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்திருக்கிறது. எனவே, என்ஜாய் காரைவிட விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

வசதிகள்

வசதிகள்

டிசைனில் சிறப்பாக இருப்பதோடு, ஏராளமான பாதுகாப்பு மற்றும் சிறப்பு வசதிகளை செவர்லே ஸ்பின் வழங்கும். எனவே, போட்டியாளர்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத மாடலாக வர இருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இந்தியாவில் செவர்லே ஸ்பின் எம்பிவி காரில் 73.95 எச்பி பவரையும், 190என்எம் டார்க்கையும் வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது சிறப்பான மைலேஜுக்கு உத்தரவாதம் அளிக்கும். இதேபோன்று, இந்த கார் விற்பனையில் இருக்கும் நாடுகளில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலிலும் கிடைக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது.

 விற்பனையில் இருக்கும் நாடுகள்

விற்பனையில் இருக்கும் நாடுகள்

பிரேசில், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷிய ஆகிய நாடுகளில் செவர்லே ஸ்பின் விற்பனையில் இருந்து வருகிறது. தற்போது இந்தியாவில் செவர்லே ஸ்பின் காரின் சோதனை ஓட்டங்கள் நடந்து வருவதால், அடுத்து இந்தியாவில்தான் இந்த புதிய காம்பேக்ட் எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன.

 போட்டி

போட்டி

மாருதி எர்டிகாவுக்கு நேர் போட்டியாளராக கூறலாம். தவிர்த்து, ஹோண்டா மொபிலியோவுக்கும் இது குடைச்சல் கொடுக்கும்.

 

English summary

 Chevrolet has recently announced that it is shutting down its manufacturing unit in Indonesia. This means they will be focussing more on their India operations. General Motors had promised it would be getting its Spin MPV to India by 2016. In an attempt to boost sales in India, they could pre-pone the launch of their Spin MPV. Their products are not doing well in Indonesia and India would act as their new manufacturing hub. India could get its future vehicles prior to General Motors original launch plan.
Story first published: Monday, March 2, 2015, 16:02 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more