செவர்லே ட்ரெயில்பிளேசரை களமிறக்கும் பணிகளில் விறுவிறுப்பு!

Written By:

செவர்லே பிராண்டு மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்ட நிலையில், இந்தியாவில் தனது பிராண்டு மதிப்பை உயர்த்துவதற்கான முயற்சிகளை அந்த நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. விற்பனையை அதிகரிக்கவும், விற்பனைக்கு பின் சிறப்பான சேவையை அளிப்பதற்காகவும் புதிய கொள்கைகளை வகுத்துக் கொண்டு செயல்பட துவங்கியிருக்கிறது.

இதற்கு வலுசேர்க்கும் விதத்தில், விற்பனையில் சோபிக்காத கார் மாடல்களை விற்பனையில் தூக்கி வருகிறது செவர்லே. அதற்கு பதிலாக புதிய மாடல்களை களமிறக்கவும் திட்டமிட்டிருக்கிறது. இந்த திட்டத்தின்படி, இந்த ஆண்டு இறுதியில் புதிய செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ட்ரெயில்பிளேசர் இறக்குமதி

ட்ரெயில்பிளேசர் இறக்குமதி

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியை இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். மேலும், சாலை சோதனைகளையும் அந்த நிறுவனம் துவங்கியிருக்கிறது.

செக்மென்ட்

செக்மென்ட்

டொயோட்டா ஃபார்ச்சூனர், மிட்சுபிஷி பஜேரோ உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு நிகரான செக்மென்ட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது. தற்போது செவர்லே கேப்டிவா எஸ்யூவிக்கு போதிய வரவேற்பு இல்லாத நிலையில், ட்ரெயில்பிளேசர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ்.

 சவாலான விலை

சவாலான விலை

முக்கிய பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது. எனவே, இதன் செக்மென்ட்டிலேயே மிக சவாலான விலை கொண்ட மாடலாக ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியை நிலைநிறுத்த ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது. விலையில் சொதப்பினால் மற்ற செவர்லே மாடல்களுடன் போய் வரிசையில் கைகட்டி நிற்க வேண்டியதுதான்.

 எஞ்சின்

எஞ்சின்

வெளிநாடுகளில் 200எச்பி பவரை அளிக்கும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் வேறு எஞ்சின் ஆப்ஷனிலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம்

ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்

கார்னரிங் பிரேக் கன்ட்ரோல்

ஹைட்ராலிக் பிரேக் ஃபேடு அசிஸ்ட்

ஹில் டிசென்ட் கன்ட்ரோல்

டிராக்ஷன் கன்ட்ரோல்

ஏர்பேக்குகள்

இம்மொபைலைசர் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும்.

 
English summary
Chevrolet currently sells a wide range of products in the Indian market. The manufacturer is having a tough time selling vehicles in India. Their plan is to introduce vehicles that will attract buyers to their products. They plan on introducing an all-new SUV in India by 2015-end.
Story first published: Monday, March 9, 2015, 15:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark