செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

Written By:

ரூ.26.40 லட்சம் விலையில், புதிய செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி இந்தியாவில் இன்று முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

டொயோட்டா ஃபார்ச்சூனர், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களுக்கு நேர் போட்டியாக இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி மாடல் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

முன்பதிவு

முன்பதிவு

செவர்லே டீலர்களில் மட்டுமின்றி, அமேஸான் தளத்திலும் இந்த புதிய செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவிக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. இன்று முதல் வரும் 26ந் தேதி வரை அமேஸான் தளத்தில் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம். இந்த முன்பதிவு வசதியில், முன்பதிவை வாபஸ் பெறுவதற்கும், முன்பதிவு தொகையை திரும்ப பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அருகாமையிலுள்ள டீலருக்கு அமேஸான் முன்பதிவுகள் மாற்றப்படும். டீலர்களிலும் வழக்கம்போல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியில் 197 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 2.8 லிட்டர் டர்போசார்ஜ்டு டியூராமேக்ஸ் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழியாக எஞ்சின் சக்தி சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. உட்புறத்தில் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, எலக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 7 இன்ச் டச்ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் மொபைல்போனை இணைத்துக் கொள்வதற்கான செவர்லே மைலிங் அப்ளிகேஷனும் உள்ளது. லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரி விகிதத்தில் செலுத்தும் இபிடி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ், காரை நிலைத்தன்மையுடன் செலுத்தும் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏற்றமான சாலைகளில் கார் பின்னோக்கி உருளாதவாறு காத்துக் கொள்ளும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் போன்ற பல பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமராவும் உள்ளது.

வடிவம்

வடிவம்

புதிய ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி 4,878மிமீ நீளமும், 1,902மிமீ அகலமும், 1,838மிமீ உயரமும் கொண்டது. 2,845மிமீ வீல் பேஸ் கொண்ட இந்த எஸ்யூவி மிகச்சிறப்பான உட்புற இடவசதியை அளிக்கிறது. மேலும், 241மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் இருப்பதால், இந்திய சாலைகளுக்கு பொருத்தமான மாடலாகவும் இருக்கும். இந்த எஸ்யூவியின் கெர்ப் எடை 2,068 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.

 விலை

விலை

ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி ரூ.26.40 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

 
English summary
Chevrolet launches Trailblazer in India at a price of Rs. 26.40 lakhs ex-showroom (Delhi). Customers can book this SUV through Amazon.in across the country. This is the first launch by Chevrolet in India during 2015.
Story first published: Wednesday, October 21, 2015, 15:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark