இந்தியாவுக்கு ஸ்பின் எம்பிவி, ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி: ஜிஎம் உறுதி செய்தது

Written By:

அடுத்த ஆண்டு இந்தியாவில் செவர்லே ஸ்பின் காம்பேக்ட் எம்பிவி காரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 13ந் தேதி பாங்காக் நகரில் நடந்த செவர்லே டீலர்கள் கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி எர்டிகாவுக்கு நேரடி போட்டியாளராக வரும் செவர்லே ஸ்பின் எம்பிவி கார் குறித்தும், ட்ரெயில் பிளேசர் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

இந்த இரு கார்களையும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஆராய்ச்சி மற்றும் சோதனை ஓட்டப் பணிகளுக்காக இந்தியாவில் இற்ககுமதி செய்துவிட்டது. சோதனை ஓட்டங்களும் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ஜாய்க்கு மாற்று

என்ஜாய்க்கு மாற்று

தற்போது விற்பனையில் இருக்கும் என்ஜாய் எம்பிவி காருக்கு மாற்றாக இந்த புதிய எம்பிவி காரை அறிமுகம் செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது. மிக சிறப்பான வடிவமைப்பு மற்றும் தரம் கொண்ட மாடலாக போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில் இந்த புதிய ஸ்பின் எம்பிவியை களமிறக்க ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

7 சீட்டர்

7 சீட்டர்

4,360மிமீ நீளம் கொண்டதாக இருக்கும் இந்த புதிய எம்பிவி கார் எர்டிகா, மொபிலியோ போன்ற போட்டியாளர்களைவிட சிறப்பான இடவசதி கொண்ட காராக இருக்கும் என்று தெரிகிறது. அதாவது, மூன்றாவது வரிசையில் சராசரி உயரம் கொண்ட பெரியவர்களும் வசதியாக அமர்ந்து செல்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

 எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

வெளிநாட்டு சந்தைகளில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களிலும், 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடலிலும் விற்பனை செய்யப்படுகிறது. 5 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக அங்கு கிடைக்கிறது.

விலை

விலை

மாருதி எர்டிகா மார்க்கெட்டை உடைக்கும் விதத்தில், மிக சவாலான விலையில் இந்த புதிய செவர்லே ஸ்பின் எம்பிவிக்கு விலையை நிர்ணயித்து களமிறக்க ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சிறப்பான வாடிக்கையாளர் சேவையை வழங்குவதையும் முதல் நோக்காக கொண்டு, பல புதிய மாடல்களை களமிறக்க இந்தியாவில் தனக்கு ஓர் நிரந்தர இடத்தை பெற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ட்ரெயில் பிளேசர் எஸ்யூவி

ட்ரெயில் பிளேசர் எஸ்யூவி

டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் மற்றும் மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக புதிய செவர்லே ட்ரெயில்பிளேசர் நிலைநிறுத்தப்படும். இந்த புதிய எஸ்யூவி மாடலில் 180 பிஎச்பி பவரையும், 470 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 6 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக அங்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியாவில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் ட்ரெயில் பிளேசர் வரும் என்பது கணிப்பு.

 
English summary

 US auto major General Motors has announced that it will introduce the Chevrolet Trailblazer SUV in 2015 and Chevrolet Spin MPV in 2016 in India. The news was originally shared with GM India dealers during their annual meeting in Bangkok on February 13. 
Story first published: Tuesday, February 17, 2015, 11:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark