இந்தியாவுக்கான செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி, ஸ்பின் எம்பிவி கார்கள் அறிமுகம்!

Written By:

இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி மற்றும் ஸ்பின் எம்பிவி கார்கள் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஜெனரல் மோட்டார்ஸ் தலைமை அதிகாரி மேரி பாரா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும், மிகப்பெரிய முதலீட்டு திட்டங்களும் இந்த நிகழ்ச்சியில் ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்தது.

செவர்லே ட்ரையல்பிளேசர்

செவர்லே ட்ரையல்பிளேசர்

இந்தியாவுக்கான சிறப்பம்சங்கள் கொண்ட செவர்லே ட்ரையல்பிளேசர் அறிமுகம் செய்யப்பட்டது. தாய்லாந்தில் விற்பனை செய்யப்படும் அதே சிறப்பம்சங்கள் கொண்ட மாடல்தான் இந்தியாவிலும் வர இருப்பது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் இந்தியா வர இருக்கும் மாடலின் உட்புறத்தில் இரட்டை வண்ண இன்டிரியர் இருக்கிறது.

ட்ரையல்பிளேசர் எஞ்சின்

ட்ரையல்பிளேசர் எஞ்சின்

இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் ட்ரையல்பிளேசர் எஸ்யூவியில் 200 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் அல்லது ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கும்.

விரைவில் விற்பனை

விரைவில் விற்பனை

டொயோட்டா ஃபார்ச்சூனருடன் நேரடியாக மல்லுகட்ட வரும் இந்த புதிய எஸ்யூவி வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த எஸ்யூவியில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

 செவர்லே ஸ்பின் எம்பிவி

செவர்லே ஸ்பின் எம்பிவி

மாருதி எர்டிகாவுக்கு நேர் போட்டியாளராக வர இருக்கிறது. மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் என்ஜாய் எம்பிவி காருக்கு மாற்றாக இந்த புதிய மாடலை நிலைநிறுத்தவும் ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஸ்பின் எஞ்சின் ஆப்ஷன்

ஸ்பின் எஞ்சின் ஆப்ஷன்

செவர்லே ஸ்பின் எம்பிவி கார் 107 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 89 பிஎச்பி பவரை அளிக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் கொணடதாக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். ஆனால், 2017ம் ஆண்டு துவக்கத்தில்தான் செவர்லே ஸ்பின் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது

 
English summary
American car maker General Motors has unveiled two of its upcoming vehicles - the Chevrolet Trailblazer SUV and Chevrolet Spin MPV in India yesterday.
Story first published: Thursday, July 30, 2015, 9:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark