மிக நீளமான மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு பஸ் அறிமுகம்... கேபிஎன் டிராவல்ஸுக்கு முதல் பஸ்!

Written By:

மிக நீளமான சொகுசு பஸ் மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில், முதல் பஸ் கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு டெலிவிரி வழங்கப்பட்டது.

சென்னையில் உள்ள டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன தயாரிப்பு ஆலையில் நடந்த நிகழ்ச்சியில், முதல் பஸ்சின் சாவியை கேபிஎன் டிராவல்ஸ் அதிபர் கேபிஎன்.ராஜேஷ் வசம் டெய்ம்லர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எரிக் நெசல்லாஃப் வழங்கினார். இந்த பஸ்சின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

பெயர்

பெயர்

மெர்சிடிஸ் பென்ஸ் மல்டி ஆக்ஸில் சூப்பர் ஹை-டெக் எஸ்எச்டி 2436 என்ற பெயரில் இந்த புதிய சொகுசு பஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மிக நீளமான பஸ்

மிக நீளமான பஸ்

இந்தியாவில் தயாரிக்கப்படும் மிக நீளமான பஸ் மாடலாக குறிப்பிடப்படும் இந்த பஸ் 15 மீட்டர் நீளம் கொண்டது. மேலும், இதன் ரகத்தில் மிக இலகு எடை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த மல்டி ஆக்ஸில் பஸ்சில் 61 பேர் பயணிக்க முடியும். இந்த ஹை-டெக் பஸ்சில் 14 கியூபிக் மீட்டர் கொள்ளளவுக்கு பொருட்களை வைப்பதற்கான இடவசதி உள்ளது.

 ரியர் ஆக்ஸில்

ரியர் ஆக்ஸில்

மிக நீளமான இந்த பஸ்சை எளிதாக திருப்பும் வகையில், பின்புறத்தில் ஸ்டீயரிங் சிஸ்டத்துடன் தொடர்புடைய ஆக்ஸில் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்சக்கரத்திற்கு எதிர்புறத்தில் இந்த சக்கரங்கள் திரும்பும் என்பதால், பஸ்சை மிக எளிதாக திருப்ப முடியும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இலகு எடையும் மிக உறுதியான சேஸியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதன் டீசல் டேங்க் மிகவும் பாதுகாப்பான இடத்தில் பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நவீன பிரேக்கிங் சிஸ்டமும் ஒவ்வொரு பயணத்தையும் பாதுகாப்பாக மாற்றும் என்று டெய்ம்லர் தெரிவித்துள்ளது.

சென்னையில் உற்பத்தி

சென்னையில் உற்பத்தி

சென்னை, ஒரகடத்திலுள்ள டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன தயாரிப்பு ஆலையில்தான் பின்புற எஞ்சின் அமைப்புடைய இந்த புதிய சொகுசு பஸ் மாடல் உற்பத்தி செய்யப்படுகிறது.

டீலர்கள்

டீலர்கள்

நாடு முழுவதும் உள்ள 80 பாரத்பென்ஸ் டீலர்ஷிப்புகள் வழியாக இந்த புதிய சொகுசு பஸ் மாடல் விற்பனைக்கு கிடைக்கும். அத்துடன், 24 மணிநேர அவசர உதவி சேவையும் சொகுசு பஸ் அதிபர்களை கவரும்.

கேபிஎன் டிராவல்ஸ்

கேபிஎன் டிராவல்ஸ்

தென் இந்தியாவின் மிகப்பெரிய பஸ் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் சேலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கேபிஎன் நிறுவனம் 330 பஸ்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

English summary
Daimler India has launched the Mercedes-Benz SDH 2436 High deck Coach in India, and has also announced the start of sale. The begining of sale for the Mercedes-benz High Deck Coach was marked by handing over the first set of keys to KPN Travels in Chennai.
Story first published: Tuesday, December 22, 2015, 14:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more