டட்சன் கோ காரை விட கோ ப்ளஸ் காரையே இந்தியர்கள் ஆசைப்படறாங்களாம்!

டட்சன் கோ காரைவிட கோ ப்ளஸ் காம்பேக்ட் எம்பிவி காரின் விற்பனை அதிகம் என்று நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைவான விலை கார்களுக்காக டட்சன் பிராண்டை நிசான் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்தது. அந்த பிராண்டில் முதலாவதாக, கோ என்ற பெயரிலான ஹேட்ச்பேக் காரையும், அதைத்தொடர்ந்து கோ ப்ளஸ் என்ற மினி எம்பிவி காரையும் அறிமுகம் செய்தது.

Go Plus MPV

இந்தநிலையில், கோ காரின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. அதேநேரத்தில், கோ ப்ளஸ் காரின் விற்பனை பரவாயில்லை என்ற நிலையில் இருக்கிறது. அதாவது, கோ காரைவிட அதிகமான விற்பனை எண்ணிக்கையை கோ ப்ளஸ் பதிவு செய்துள்ளதாம்.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாத விற்பனையின்படி, கோ காரைவிட கோ ப்ளஸ் காரின் விற்பனை அதிகமாம். கோ ப்ளஸ் காரின் சிறப்பான பூட் ஸ்பேஸ் கொண்டிருப்பதே, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்குரிய மாடலாக மாறியுள்ளதற்கு காரணம்.

மேலும், டிசைன், விலை, மைலேஜ் போன்ற விஷயங்களும் கோ ப்ளஸ் காருக்கு புதிய மார்க்கெட்டை உருவாக்கி தந்துள்ளது. அதேநேரத்தில், நிசான் நிறுவனம் எதிர்பார்த்த அளவு இரு கார்களின் விற்பனையும் இல்லை என்பதே உண்மை. அடுத்த ஆண்டு டட்சன் பிராண்டில் புதிய குட்டி கார் மாடலை நிசான் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டட்சன் #datsun
English summary
The Go hatchback was Datsun's first vehicle in modern India, which was soon followed by Go+ compact MPV. They are also planning on launching a compact hatchback in the near future. Now it has been confirmed that the compact MPV has beaten the hatchback in India during April and May of 2015. It seems that people are opting for the Go+, which offers more boot space.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X