டட்சன் கோ காருக்கு ஆறுதல்... ஆசிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 2 ஸ்டார் ரேட்டிங்!

By Saravana

கடந்த ஆண்டு குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டட்சன் கோ கார் பூஜ்ய பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றது. மேலும், கட்டுமானம் மிகவும் வலிமை குறைந்ததாக இருப்பதால், இந்தியாவில் டட்சன் கோ கார் விற்பனையை நிறுத்துமாறும், குளோபல் என்சிஏபி அமைப்பு நிசான் நிறுவனத்தை வலியுறுத்தியது.

இந்தியாவில் இருக்கும் பாதுகாப்பு தர கொள்கைகளுக்கு இணையான அம்சங்கள் டட்சன் கோ காரில் இருப்பதாக நிசான் தெரிவித்தது. இந்தநிலையில், இந்தோனேஷியாவில் விற்பனை செய்யப்படும் மாடலை கிராஷ் டெஸ்ட் ஆய்வுக்கு உட்படுத்தி முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. ஆசிய என்சிஏபி அமைப்பு. இதில், டட்சன் கோ கார் 2 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருக்கிறது.

 ஆசிய என்சிஏபி அமைப்பு

ஆசிய என்சிஏபி அமைப்பு

இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஆசிய என்சிஏபி அமைப்பு இந்த கிராஷ் டெஸ்ட் ஆய்வை மேற்கொண்டது. இந்தோனேஷியாவில் விற்பனை செய்யப்படும் மாடல்தான் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாடல்

மாடல்

டிரைவர் பக்கத்திற்கான ஒரு ஏர்பேக் பொருத்தப்பட்ட டட்சன் கோ கார்தான் கிராஷ் டெஸ்ட் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. முன்பக்கத்தை தடையின் மீது மோதி சோதனை செய்யப்பட்டது. கடந்த 7ந் தேதி இந்த சோதனை செய்யப்பட்டு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது.

முடிவு

முடிவு

இந்த முடிவில் பெரியவர்களுக்கான பாதுகாப்பு தர மதிப்பீட்டில் அதிகபட்சம் 16 புள்ளிகளுக்கு 6.82 புள்ளிகளை டட்சன் கோ பெற்றது. இதன்மூலம், பெரியவர்களுக்கான பாதுபாப்பில் 2 நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. அதேபோன்று, சிறியவர்களுக்கான பாதுகாப்பு தர மதிப்பீட்டிலும் 2 நட்சத்திர அந்தஸ்தை பெற்றது.

புதிய பாடி பேனல்

புதிய பாடி பேனல்

தற்போது கூடுதல் வலிமை கொண்ட புதிய பாடி பேனல்கள் டட்சன் கோ காரில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கான பாதுகாப்பு தர மதிப்பீட்டில் 2 நட்சத்திர அந்தஸ்தை மட்டுமே பெற்றிருக்கிறது.

 சிறு ஆறுதல்

சிறு ஆறுதல்

விற்பனையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில், குறைந்தது 2 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றிருப்பது அந்த நிறுவனத்துக்கு சற்று ஆறுதலை தருவதாகவே இருக்கிறது. இருப்பினும், இது போதுமான தர மதிப்பீடாக எடுத்துக் கொள்ள முடியாது.

Most Read Articles
English summary
The Datsun Go has been awarded 2-stars for safety by the New Car Assessment Program for Southeast Asian Countries (ASEAN NCAP) after a series of crash tests.
Story first published: Friday, September 25, 2015, 9:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X