புதிய டட்சன் கோ ப்ளஸ் காருக்கு நாளை முதல் முன்பதிவு!

Posted By:

வரும் 15ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் புதிய டட்சன் கோ ப்ளஸ் காருக்கு நாளை முதல் முன்பதிவு துவங்கப்படுகிறது.

ரூ.11,000 முன்பணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் இந்த காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என டட்சன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவை ரத்து செய்யும் பட்சத்தில் முன்பணத்தை முழுவதுமாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என டட்சன் தெரிவித்துள்ளது.

Datsun Go Plus
 

மேலும், முதலில் முன்பதிவு செய்யும் சில வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 4 மீட்டரில் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் மினி எஸ்யூவி மாடலாக வரும் டட்சன் கோ ப்ளஸ் கார் புதிய டிரென்ட்டை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

டட்சன் கோ காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டு இருக்கிறது. டாப் வேரியண்ட் ரூ.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டட்சன் கோ ப்ளஸ் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

English summary
Datsun today announced the start of pre-booking of its Datsun GO+ Compact Family Wagon in India. The GO+ was previewed at the last Delhi Auto Expo and will be available for pre-booking between January 03rd & 14th 2015. 

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark