டட்சன் ரெடி-கோ காரின் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள்!
சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் டட்சன் ரெடி-கோ கார் டெஸ்டிங் செய்யபட்டபோது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.
புதிதாக உற்பத்தி செய்யபடும் கார்கள் சந்தையில் வெளியிடபடுவதற்கு முன்பாக, சாலைகளில் பரிசோதிக்கபடும் போது எடுக்கபடும் புகைப்படங்களை ஸ்பை பிக்ஸ் என்று அழைக்கபடுகிறது.
இந்த வகையில், டெஸ்டிங் செய்யபட்டபோது எடுக்கபட்ட டட்சன் ரெடி-கோ பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்வோம்.

ரெடி-கோ ஸ்பை படங்கள் பற்றி...
டட்சனின் ரெடி-கோ, கேமோஃப்லாஃஜ் எனப்படும் கடுமையான உருமறைப்புடன் சென்னையின் சாலைகளில் பரிசோதிக்கபட்டது.
இந்த பரிசோதனைகளின் போது தான், இந்த ஸ்பை படங்கள் எடுக்கபட்டு இணையதளங்களில் வெளியிடபட்டுள்ளது.
Images via IAB

தோற்றம்;
ஸ்டைல் விஷயத்தை பொருத்த வரை, உற்பத்திக்கு தயாரான நிலையில் உள்ள டட்சனின் புதிய ரெடி-கோ, 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி படுத்தபட்ட ரெடி-கோ கான்செப்ட்-டில் இருந்து சில அம்சங்களை தருவியுள்ளதாக தெரிகிறது.
புதிய ரெடி-கோ காரில் உள்ள ஃப்ரண்ட் கிரில், ஹெட்லேம்ப்கள் மற்றும் டெய்ல் லேம்ப்கள் உள்ளிட்ட அம்சங்கள், ரெடி-கோ கான்செப்ட் காரில் காணபட்டது போன்றே உள்ளன.
Images via IAB

வடிவமைக்கபட்ட பிளாட்ஃபார்ம்;
புதிய ரெடி-கோ கார், சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது. ரெனோ க்விட் மாடலும் இதே பிளாட்ஃபார்மை தான் அடிப்படையாக கொண்டு வடிவமைப்பு செய்யபட்டுள்ளது.
க்விட் காரில் உள்ள அதே 800 சிசி பெட்ரோல் இஞ்ஜின் தான், இந்த புதிய ரெடி-கோ காரில் பொருத்தபடலாம் என தெரிகிறது.
புதிய ரெடி-கோ காரில், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ்களும் கூடுதலாக சேர்க்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
Images via IAB

போட்டி கார்கள்;
டட்சனின் ரெடி-கோ, இந்திய வாகன சந்தையில் மாருதி-சுஸுகி ஆட்லோ 800, ஹூண்டாய் இயான் மற்றும் ரெனோ க்விட் உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட வேண்டி இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;
ரூ.2 லட்சத்தில் வரும் டட்சனின் புதிய கார் கான்செப்ட் அறிமுகம்!

விலை;
டட்சனின் ரெடி-கோ காரின் விலை, சுமார் 3 லட்சம் ரூபாய் என்ற அளவில் நிர்ணயிக்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.


Click it and Unblock the Notifications








