ரூ.35.93 லட்சத்தில் இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் டிசி அவந்தி அறிமுகம்!

By Saravana

இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமைக்குரிய டிசி அவந்தி கார், நேற்று மாலை மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டிசி டிசைன் நிறுவனத்தின் நிறுவனரும், பிரபல டிசைனருமான திலீப் சாப்ரியா," அதிவேகத்தை விரும்பும் இளைய சமுதாயத்தினருக்காக, இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற அம்சங்களுடன் இந்த ஸ்போர்ட்ஸ் காரை உருவாக்கியிருக்கிறோம்," என்று பெருமிதம் தெரிவித்தார். கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 இந்திய தயாரிப்பு

இந்திய தயாரிப்பு

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடல். டிசி டிசைன் நிறுவனத்தின் தலைவரும், கார் டிசைனருமான திலீப் சாப்ரியா மற்றும் அவரது குழுவினர் இணைந்து உருவாக்கியுள்ளனர். மிக குறைவான விலையில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

அதிக உறுதிமிக்க கார்பன் ஃபைபர் பாடி பேனல்களுடன், எதிர்காலத்திற்கானதாக கருதப்படும் ஸ்பேஸ் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 20 இன்ச் அலாய் வீல்களுடன் வெவ்வேறு அளவுடைய டயர்களில் தேர்வு செய்து கொள்ள முடியும். பை- ஹேலஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் உள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரில் யூரோ-5 மாசுக் கட்டுப்பாட்டு தர நிர்ணயத்திற்கு இணையான 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 249 குதிரைசக்தி திறனையும், 366 எனஅஎம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய வகையில், எலக்ட்ரானிக் சிஸ்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

 பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருப்பதுடன், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷனுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் உள்ளது.

அச்சச்சோ...

அச்சச்சோ...

இப்போது ஆரம்ப நிலை கார்களிலேயே ஏர்பேக் ஆப்ஷனலாக கொடுக்கப்படும் நிலையில், இந்த ஸ்போர்ட்ஸ் காருக்கு ஆப்ஷனலாக கூட ஏர்பேக் வழங்கப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

ஆப்பிள் கார் ப்ளே

ஆப்பிள் கார் ப்ளே

முதல்முறையாக டிசி அவந்தி காரில் ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டம் கொண்டதாக வந்துள்ளது. ஆனால், இதனை ஆப்ஷனலாக கூடுதல் விலை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

உற்பத்தி

உற்பத்தி

மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகில் உள்ள தாலேகானில் அமைக்கப்பட்டிருக்கும் டிசி நிறுவனத்தின் புதிய ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்படுகிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

டிசி அவந்தி கார் சிவப்பு, சில்வர் மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

விலை, வாரண்டி

விலை, வாரண்டி

ரூ.35.93 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலையில் டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஓர் ஆண்டு அல்லது 10,000 கிமீ தூரத்துக்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.

Most Read Articles
English summary
DC Avanti Coupe was first showcased as a concept at 2014 Auto Expo in Delhi. India's first sportscar has been designed and developed by Dilip Chhabria and his DC Design team.
Story first published: Friday, September 25, 2015, 13:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X