டொயோட்டா இன்னோவாவுக்கு புதிய பாடி கிட்டை அறிமுகப்படுத்தி டிசி டிசைன்ஸ்!

சொகுசான பயணத்தை விரும்புவர்களுக்கு டொயோட்டா இன்னோவா கார் சிறந்த சாய்ஸாக விளங்குகிறது. தாராள இடவசதி, சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பு, ஆற்றல் வாய்ந்த எஞ்சின் என ஓட்டுனருக்கும், பயணிகளுக்கும் சிறப்பான அனுபவத்தை தருவதில் இன்னோவா தன்னிகரில்லாமல் விளங்குகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் பிரபலமான கார் கஸ்டமைஸ் நிறுவனமான டிசி டிசைன்ஸ் இன்னோவா காருக்கு மற்றுமொரு புதிய பாடி கிட்டை அறிமுகம் செய்திருக்கிறது. வெளிப்புறம் மற்றும் உள்புற அலங்காரத்திற்கான ஆக்சஸெரீகளுடன், மிக சொகுசான சமாச்சாரங்களுடன் இந்த புதிய பாடி கிட்டை டிசி டிசைன்ஸ் அறிமுகம் செய்திருக்கிறது.


 பாடி கிட்

பாடி கிட்

முந்தைய இன்னோவா மாடலுக்கான பாடி கிட்டாக இது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டிசி டிசைன் முத்திரையுடன் கூடிய முகப்பு க்ரில் அமைப்பு, சைடு ஃபுட் ஸ்டெப்ஸ், ராக்கர் பேனல்கள் என காரின் உருவத்தை மிக கம்பீரமாக காட்டுகின்றன.

கேபின்

கேபின்

பின்புற இருக்கைகளை எடுத்துவிட்டு, சாய்மான வசதி கொண்ட இரண்டு கிங் சைஸ் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். இதனை 150 டிகிரி கோணத்தில் சாய்த்துக் கொள்ள முடியும். ஆம்பியன்ட் லைட் செட்டிங் கொண்ட கூரை விமானங்களில் பயணிப்பது போன்ற ஓர் உணர்வை தரும். முன்புற இருக்கைகளுக்கு பின்னால் தடுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. லேப்டாப் வைப்பதற்கான வசதி, சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளன. கதவுகளில் அலங்கார மரத்தகடுகள் பொருத்தப்பட்டிரு்பபதுடன், அதில் கன்ட்ரோல் சுவிட்சுகள் இருக்கின்றன.

 இதர வசதிகள்

இதர வசதிகள்

24 இஞ்ச் எல்இடி டிவி, டிவிடி ப்ளேயர், ஸ்பீக்கர்கள், இன்டர்காம், முன்புறம் மற்றும் ரிவர்ஸ் கேமராக்கள் உள்ளன.

தடையில்லா மின்சாரம்

தடையில்லா மின்சாரம்

காரை நிறுத்தியிருக்கும்போதும் மின் விளக்கு ஒளி மற்றும் இதர வசதிகளை பெறுவதற்காக இன்வர்டர் உள்ளது. கிங் சைஸ் இருக்கைகள் தவிர்த்து, இரண்டு சிறிய ஜம்ப் இருக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் அடுத்தவருக்கு தொந்தரவு இல்லாமல் படிப்பதற்கான ரீடிங் விளக்குகள் உள்ளன.

கட்டணம்

கட்டணம்

டிசி பேமைல் என்ற பெயரில் இந்த பாடி கிட் இன்னோவா காருக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கட்டணம் ரூ.9 லட்சம் வரை தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary

 DC Designs has introduced special body kit for Toyota Innova.
Story first published: Wednesday, February 25, 2015, 10:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X