டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் காரின் இன்டிரியர் படங்கள் வெளியீடு!

By Saravana

இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் என்ற முழக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கும் டிசி அவந்தி காரின் இன்டிரியர் மற்றும் வசதிகள் குறித்த தகவல்களை டிசி டிசைன்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

கார் இன்டிரியர் கஸ்டமைஸ் கலையில் கைதேர்ந்த நிறுவனம் என்பதால், தனது சொந்த தயாரிப்பிலும் அந்த தாக்கத்தை கொடுத்திருக்கிறது டிசி டிசைன்ஸ். அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் படங்கள், தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இன்டிரியர்

இன்டிரியர்

மஞ்சள்- கருப்பு- க்ரீம் வண்ணக் கலவையில் உட்புறத்தை அலங்காரம் செய்துள்ளனர்.

கீ லெஸ் என்ட்ரி

கீ லெஸ் என்ட்ரி

கீ லெஸ் என்ட்ரி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார் வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம்

டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது.

இருக்கைகள்

இருக்கைகள்

ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், அலுமினிய ஸ்போர்ட்ஸ் பெடல்கள், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சின் டிசி அவந்தி காரின் நடுவில் எஞ்சின் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 250 எச்பி பவரையும், 360 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடையது.

செயல்திறன்

செயல்திறன்

இந்த எஞ்சின் 0- 100 கிமீ வேகத்தை 8 வினாடிகளில் கடந்துவிடும். மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும்.

முன்பதிவு

முன்பதிவு

முதல் லாட்டில் 500 கார்கள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதற்குண்டான முன்பதிவுகள் முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரூ.34.9 லட்சம் விலையில் வருகிறது.

Most Read Articles
English summary
DC Designs Reveals DC Avanti Car Interior Pictures.
Story first published: Friday, August 7, 2015, 9:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X