2016ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அட்டவணை வெளியீடு

Written By:

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 13வது டெல்லி சர்வதேச வாகன கண்காட்சிக்கான கால அட்டவணை விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி சர்வதேச வாகன கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இடநெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு டெல்லி வாகன கண்காட்சி, கிரேட்டர் நொய்டாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

Chevrolet Trailblazer
 

இந்த நிலையில், 2016ம் ஆண்டுக்கான டெல்லி வாகன கண்காட்சி நடைபெற இருக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5ந் தேதி துவங்கி 9ந் தேதி வரை டெல்லி சர்வதேச வாகன கண்காட்சி நடைபெற இருக்கிறது.

இதேபோன்று, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி பிரகதி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 முதல் 7 வரையில் இந்த கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைவிட வரும் 2016ம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சிக்கு அதிக பார்வையாளர்கள் வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The 13th edition Auto Expo 2016 dates have been formally announced. India’s largest automotive exhibition is set to take place from 5th to 9th February 2016 at India Expo Mart in Greater Noida.
Story first published: Tuesday, February 17, 2015, 11:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark