டீசல் விலை உயர்ந்தது... பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை!

Written By:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையின் அடிப்படையில், டீசல் விலை 95 பைசா உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த புதிய விலை உயர்வு வியாழன் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வை அடுத்து, 44.95 ரூபாயாக இருந்த டீசலின் விலை 45.90 ரூபாய் என உயர்ந்துள்ளது.

diesel price hiked petrol unchanged

இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அக்டோபர் ஒன்றாம் தேதியன்று டீசலின் விலை 50 பைசா உயர்த்தப்பட்டது. பெட்ரோலின் விலை, எந்த மாற்றமும் இல்லாமல் முன்பு இருந்த நிலையிலேயே தொடர்கிறது.

பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி செலவை பொறுத்தும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பை பொறுத்தும், அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் பெட்ரோலிய பொருட்களின் விலையை, 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கின்றது.

English summary
Diesel prices are hiked by 95 paise per litre, whereas Petrol prices remains unchanged.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark