ரெனோ கோலியோஸ் எஸ்யூவிக்கு ரூ.6 லட்சம் வரை சேமிப்பு சலுகைகள்!

Written By:

தீபாவளியை முன்னிட்டு, ரெனோ கோலியோஸ் எஸ்யூவிக்கு ரூ.6 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ் மற்றும் இருப்பு உள்ள கோலியோஸ் எஸ்யூவிகளை தீர்த்துக் கட்டும் விதமாக டீலர்கள் வழங்கும் சிறப்பு தள்ளுபடிகளும் இதில் அடக்கம்.

காரணம்

காரணம்

ரெனோ கோலியோஸ் எஸ்யூவியின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. எனவே, டீலர்களில் தேங்கியிருக்கும் கார்களை தீர்த்துக் கட்டும் விதத்தில் இந்த அதிரடி சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை பெற முடியும். ரெனோ கோலியோஸ் எஸ்யூவி பற்றிய சில முக்கியத் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

ரெனோ கோலியோஸ் எஸ்யூவியில் 2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 148 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்திலும், 171 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்திலும் இருவிதமான ட்யூனிங்கில் கிடைக்கிறது. மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

 4 வீல் டிரைவ் சிஸ்டம்

4 வீல் டிரைவ் சிஸ்டம்

மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் தேர்வு செய்து கொள்ளலாம்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

ரெனோ கோலியோஸ் எஸ்யூவியில் இபிடி., நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், பிரேக் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

மேனுவல் கியர்பாக்ஸ் [2WD] மாடல் : ரூ.23.53 லட்சம்

மேனுவல் கியர்பாக்ஸ் [4WD] மாடல் : ரூ.26.75 லட்சம்

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் [4WD] : ரூ.27.82 லட்சம்

அனைத்தும் மும்பை எக்ஸ்ஷோரூம் விலைகள்

 

English summary
Renault will be offering the Koleos premium SUV in India with benefits worth Rs. 6 lakh and is hoping for a boost in sales during Diwali. Currently, Renault Koleos is offered in three variants for the Indian market.
Story first published: Monday, November 9, 2015, 14:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark