8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி ஏழரைதான்...!

Posted By:

கம்ப்யூட்டர் முறையில் ஓட்டுனரின் திறன்களை பரிசோதித்து வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கும் நடைமுறையை புனே ஆர்டிஓ., நிர்வாகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

டிரைவிங் லைசென்ஸ் பெறுபவர்களை இனி ஆர்டிஓ அதிகாரிகள் பக்கத்தில் இருந்து கண்காணித்து லைசென்ஸ் கொடுக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய தேவையில்லை. இனி அந்த வேலையை கம்ப்யூட்டர்களே இருக்கும் இடத்திலிருந்து பார்த்துவிடும்.

நவீன டெஸ்ட் டிராக்

நவீன டெஸ்ட் டிராக்

புனேயிலுள்ள போக்குவரத்து ஆராய்ச்சி கழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நவீன டெஸ்ட் டிராக்கில் ஓட்டுனர்கள் தங்களது திறன்களை முழுமையாக நிரூபித்தால்தான் இனி ஓட்டுனர் உரிமத்தை பெற இயலும். இந்த புதிய முறையை அமல்படுத்துவதற்காக அம்மாநில அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

சென்சார் நுட்பம்

சென்சார் நுட்பம்

ரேடியோ பிரிகுயன்ஸி ஐடென்டிகேசன்(ஆர்எப்ஐடி) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன தொழில்நுட்பம் மூலம் டெஸ்ட் டிராக்கில் இருக்கும் சென்சார்கள் ஓட்டுனர்களின் தவறுகளை துல்லியமாக கணித்துவிடும். டெஸ்ட் டிராக்குகளின் பக்கவாட்டுகளிலும், தரைக்கு அடியிலும் சென்சார்கள் பொருத்தப்படும்.

துல்லியம்

துல்லியம்

இந்த சென்சார்கள் ஆர்டிஓ அலுவலங்களில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும். லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தவர் டெஸ்ட் டிராக்கில் வாகனத்தை ஓட்டும்போது, அதை சென்சார்கள் துல்லியமாக அறிந்துகொண்டு செய்து கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யும்.

அறைகுறைகளுக்கு வேலை இல்லை

அறைகுறைகளுக்கு வேலை இல்லை

விதிமுறைகளுக்குட்பட்டு அவர் சரியாக வாகனத்தை ஓட்டினாரா அல்லது அரைகுறையா என்பதை கண்டுபிடித்து லைசென்ஸ் வழங்கலாமா வேண்டாமா என்பதை கம்ப்யூட்டரே கூறிவிடும். கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான டெஸ்ட் டிராக்கில் இந்த புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.

முறைகேடுகளுக்கு ஆப்பு

முறைகேடுகளுக்கு ஆப்பு

இந்த புதிய நடைமுறையின்படி, ஓட்டுனர் உரிமம் பெறுவதில் இருக்கும் முறைகேடுகள் வெகுவாக குறையும் வாய்ப்பு இருக்கிறது.

நாடு முழுவதும்...

நாடு முழுவதும்...

குஜராத்தில் நவீன டெஸ்ட் டிராக்குகள் இருக்கின்றன. ஆன்லைன் மூலமாகவே இந்த டெஸ்ட் டிராக்குகளில் வாகன ஓட்டி லைசென்ஸ் பெறுவதற்கு முன்பதிவு செய்ய முடியும். இதைத்தொடர்ந்து, புனே நகரில் இந்த நவீன டெஸ்ட் டிராக் செயல்பட உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதுபோன்ற நவீன டெஸ்ட் டிராக்குகள் அமைக்கப்பட உள்ளன.

 
English summary
The Regional Transport Office (RTO) in Pune is looking to shift to an advanced track for those looking to take tests for obtaining a permanent driver's licence.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark