எலக்ட்ரிக் வாகனங்களின் பிரயோகத்தை ஊக்குவிக்க டெல்லியில் வாகன அணிவகுப்பு!

Written By:

எலக்ட்ரிக் வாகனங்களின் பிரயோகத்தை ஊக்குவிக்க, ஃபேம் இந்தியாவால் நடத்தபடும் வாகன அணிவகுப்பு டெல்லி உள்பட நாட்டின் பல நகரங்களில் நடைபெற்று வருகின்றது.

ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பை விரைவுப்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், ஃபேம் இந்தியா என்ற மானிய திட்டத்தை மத்திய அரசு நடைமுறையில் வைத்திருக்கிறது. இந்த அமைப்பின் மூலமாக தற்போது மின்வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக நாடு முழுவதும் சிறப்பு வாகன அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மாசு உமிழ்வு குறைவாக ஆகும் பசுமை போக்குவரத்து சாதனங்களாக கருதப்படும் மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ஃபேம் இந்தியா எகோ டிரைவ் ராலி பல நகரங்களில் நடத்தப்படுகிறது.

இது தொடர்பான வாகன அணிவகுப்பு நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் டெல்லி, ஜெய்பூர் மற்றும் சண்டிகர் உள்ளிட்ட மூன்று நகரங்களில் நடை பெறுகின்றது. முதல் கட்டமாக, நவம்பர் 26-ஆம் தேதி டெல்லியில் இந்த எகோ டிரைவ் ராலி துவங்கியது. அடுத்த கட்டமாக, நவம்பர் 30-ஆம் தேதி ஜெய்பூரிலும், டிசம்பர் 7-ஆம் தேதி சண்டிகரிலும், இந்த எகோ டிரைவ் ரேல்லி நடத்தபட உள்ளது.

சொசைட்டி ஆஃப் மேனுஃபேக்சுரர்ஸ் ஆஃப் எலக்ட்ரிக் வெஹிகிள்ஸ் அமைப்பு [SMEV] இந்த எகோ டிரைவ் ரேல்லி நிகழ்ச்சிகளை முழு அளவில் ஆதரிக்கின்றது. டெல்லியில், நடந்த எகோ டிரைவ் ராலி நிகழ்ச்சியை, கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் ஆனந்த் கீதே, ரெட் ஃபோர்டில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். டெல்லியில் வாகன அணிவகுப்பு செங்கோட்டையில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று எம்டிஐ குர்கானில் முடிவுற்றது.

Eco Drive Rally to Promote Electric Mobility By FAME India is held across many cities

ஃபேம் இந்தியாவின் இந்த எகோ டிரைவ் ராலியில், ஹைப்ரிட் அல்லது எலக்ட்ரிக் மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும் பல்வேறு வகையிலான இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் பஸ்களும் இடம் பெறுகின்றன.

கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பெரும் அளவில் கூடியுள்ளது. 2016-ஆம் ஆண்டு நிறைவுக்குள், எலக்ட்ரிக் வாகனங்களின் உபயோகம் 200 சதவிகிதம் அதிகரித்துவிடும் என ஃபேம் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.

எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் உபயோகத்தை அதிகரிக்க, அனைத்து முயற்சிகளுக்கும் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கிட மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

English summary
Eco Drive Rally to Promote Electric Mobility By FAME India is held across cities. FAME India organises the Eco Drive Rally in 3 Indian cities, in Delhi on November 26, in Jaipur on November 30, and in Chandigarh on December 7.
Story first published: Friday, November 27, 2015, 12:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark