விவசாய பணிகளுக்காக சிறிய டிரக்கை தயாரிக்க ஐஷர் - போலரிஸ் கூட்டணி!

Written By:

விவசாய பணிகளுக்கு ஏதுவான அம்சங்கள் கொண்ட சிறிய ரக வாகனத்தை வடிவமைக்க போலரிஸ் - ஐஷர் கூட்டணி திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய வாகனத்தில் 600சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த சிறிய ரக வாகனத்தில் மூட்டைகள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்வதற்கு எளிதாக இருக்கும் என்பதுடன், சிலர் அமர்ந்து செல்ல ஏதுவான இருக்கை அமைப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது.

Polaris Eicher Small Truck
 

மேலும், கரடு முரடான சாலைகளில் எளிதாக செல்லும் வகையில் இருக்கும். இந்த புதிய ரக வாகனத்தை தயாரிப்பதற்காக ஆஃப்ரோடு வாகனத்தை தயாரிப்பதில் புகழ்பெற்ற போலரிஸ் நிறுவனம் தொழில்நுட்பத்தை வழங்க உள்ளது.

இந்த வாகனம் விவசாயிகளுக்கு ஏதுவாக குறைவான விலை கொண்டதாக இருக்கும். இந்த வாகனத்துக்கான டீசல் எஞ்சின் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்பட உள்ளது. இந்த புதிய வாகனத்தை தயாரிக்க ஐஷர்- போலரிஸ் கூட்டணி ரூ.250 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.

ஆண்டுக்கு 10,000 முதல் 12,000 எண்ணிக்கையில் தயாரிக்க இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஜெய்பூரில் உள்ள ஆலையிலிருந்து இந்த புதிய வாகனம் உற்பத்தி செய்யப்படும். முழுக்க முழுக்க விவசாய பயன்பாட்டுக்காக உருவாக்கப்படும் இந்த சிறிய ரக வாகனம் பெரும் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

English summary

 Eicher Motors and Polaris Industries are building a small vehicle, targeting farmers and the bottom end of the market, which has the capacity to carry a decent load as well as carry people. The companies have already committed INR 250 crores for this project.
Story first published: Saturday, January 3, 2015, 13:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more