ஐஷர்- போலரிஸ் கூட்டணியில் முதல் வாகனம் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

ஐஷர் மற்றும் போலரிஸ் நிறுவனங்களின் கூட்டணியில் உருவான முதல் இலகு ரக வர்த்தக வாகனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மல்டிக்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய மினி பிக்கப் டிரக் இரண்டு மாடல்களிலும், வண்ணங்களிலும் கிடைக்கும்.

Polaris Vehicle
 

இந்த சிறிய ரக பிக்கப் டிரக்கில் 9.78 பிஎச்பி பவரையும, 27.1 என்எம் டார்க்கையும் வழங்கும் 511சிசி சிங்கிள் சிலிண்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த பிக்கப் டிரக்கில் ஒரு ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், வீடு, கடைகளுக்கு தேவையான மின்சாரத்தை பெற முடியும். அடுத்த மாதம் முதல் இந்த வாகனத்தை வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படும். ஆகஸ்ட்டிலிருந்து டெலிவிரி துவங்கும்.

ஓபன் கேபின் கொண்ட மாடல் ரூ.2,32,850 ஜெய்ப்பூர் எக்ஸ்ஷோரூம் விலையிலும், மூடிய கேபின் வசதி கொண்ட மாடல் ரூ.2,72,000 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. சிறு வர்த்தகர்களுக்கு இது ஏற்ற பிக்கப் டிரக் மாடலாக இருக்கும்.

English summary
Eicher Polaris has launched India's very first personal utility vehicle. The manufacturer has christened this model as the ‘Multix'. It will be available in two variants and four colour options.
Story first published: Thursday, June 18, 2015, 15:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark