போலரிஸ் மல்டிக்ஸ் வாகனத்துக்கு தீபாவளி ஆஃபர்!

Posted By:

தீபாவளி பண்டிகையையொட்டி, போலரிஸ் மல்டிக்ஸ் பன்முக பயன்பாட்டு வாகனத்துக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகம் உள்பட குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த வாகனம் குடும்பத்தினருக்கும், விவசாயம் மற்றும் வியாபாரிகளுக்கு ஏற்றதாக இருக்கும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கூட்டு தயாரிப்பு

கூட்டு தயாரிப்பு

குடும்பத்தினர் பயன்படுத்துவதற்கும், வியாபாரம் மற்றும் விவசாயத்திற்கு ஏற்ற சிறப்பம்சங்களை கொண்ட மல்டிக்ஸ் என்ற பன்முக பயன்பாட்டு சிறிய பிக்கப் டிரக் வாகனத்தை போலரிஸ் மற்றும் ஐஷர் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வெளியிட்டன.

இடவசதி

இடவசதி

ஓட்டுனரை சேர்த்து 4 பேர் பயணிப்பதற்கான வசதி கொண்ட இந்த வாகனத்தின் பின்புறத்தில் பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான இடவதியும் உண்டு. பார்ப்பதற்கு குவாட்ரிசைக்கிள் ரகத்திலான சிறிய பிக்கப் டிரக் போன்றே தோற்றமளிக்கிறது. அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்றதாக இருக்கிறது.

 ஜெனரேட்டர்

ஜெனரேட்டர்

வீடு கடைகள் மற்றும் விவசாய பயன்பாட்டு மின் மோட்டார்களுக்கும் தேவையான மின்சாரத்தை வழங்கும் விதத்தில், இந்த மல்டிக்ஸ் வாகனம் மின் ஜெனரேட்டர் வசதியுடன் கிடைக்கிறது.

 தமிழகத்தில் விற்பனை

தமிழகத்தில் விற்பனை

தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய ஊர்களில் இந்த மல்டிக்ஸ் வாகனம் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை.

உறுதி செய்து கொள்க

உறுதி செய்து கொள்க

இந்த கடன் திட்டம் உங்கள் அருகாமையிலுள்ள டீலர்களில் இருக்கிறதா என்பதை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ அறிந்து கொண்டு இந்த சிறப்புத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு போலரிஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

ஓபன் கேபின் கொண்ட மாடல் ரூ.2,32,850 எக்ஸ்ஷோரூம் விலையிலும், மூடிய கேபின் வசதி கொண்ட மாடல் ரூ.2,72,000 எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 
English summary
Now, owning a Multix during this festive season will be convenient and easy as Eicher Polaris has announced ‘special festive offer' for its consumers.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark