ஃபெராரியின் டூர் தி ஃப்ரான்ஸ் ஸ்பெஷல் எடிஷன் கார் அறிமுகம்

Written By:

ஃபெராரி கார் உற்பத்தியாளர்களின், டூர் தி ஃப்ரான்ஸ் ஸ்பெஷல் எடிஷன் சூப்பர்கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் கார்கள், ஃபெராரியின் எஃப் 12 ரக கார்களை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரகத்திலான ஸ்பெஷல் எடிஷன் கார்களில், 799 கார்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறுதுறுப்பான புதிய ஃபெராரி ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்!

ஸ்டாண்டர்ட் எஃப் 13 பெர்லினெட்டாவை காட்டிலும், இந்த டூர் தி ஃப்ரான்ஸ் ஸ்பெஷல் எடிஷன் சூப்பர்காரின் ஸ்டைல் மற்றும் வடிவமைப்பு வேறுபட்டுள்ளது.

துறுதுறுப்பான புதிய ஃபெராரி ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்!

இந்த டூர் தி ஃப்ரான்ஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில், 6,262 சிசி வி12 இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 769.32 ஹார்ஸ்பவரையும், உச்சபட்சமாக 705 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

துறுதுறுப்பான புதிய ஃபெராரி ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்!

இந்த ஸ்பெஷல் எடிஷன் கார் அதிகப்படியாக மணிக்கு 340 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் சூப்பர்கார்கள் 0 முதல் 100 வரையிலான வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும். 0 முதல் 200 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

துறுதுறுப்பான புதிய ஃபெராரி ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்!

இந்த ஃபெராரி ஸ்பெஷல் எடிஷன் காரின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 6.49 கிலோமீட்டராக உள்ளது.

துறுதுறுப்பான புதிய ஃபெராரி ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்!

இந்த எஃப் 12 டூர் தி ஃப்ரான்ஸ் ஸ்பெஷல் எடிஷன் காரில், நிறைய கார்பன் ஃபைபர் பாடி பேனல்கள் உபயோகிக்கப்பட்டுள்ளது. இப்படி செய்ததன் மூலம், இந்த சூப்பர் காரின் எடை 110 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது. அடிப்படை ரக காரை காட்டிலும், இந்த ஸ்பெஷல் எடிஷன் கார் துறுதுறுப்பாக இருக்கும் என இஞ்ஜினியர்கள் தெரிவிக்கின்றனர்.

துறுதுறுப்பான புதிய ஃபெராரி ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்!

எஃப் 12 டூர் தி ஃப்ரான்ஸ் ஸ்பெஷல் எடிஷன் கார்கள் ஏரோடைனமிக்கல் முறையில் சோதிக்கப்பட்டுள்ளது. இதன் ரியர் ஸ்பாய்லர்கள் 60 மில்லிமீட்டர் நீளமும், 30 மில்லிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது. ஏர்-ஸ்ப்ளிட்டர், டைவ்-ப்ளேன்ஸ், ஃப்ளோர் விங்க்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் எஃப் 12 டூர் தி ஃப்ரான்ஸ் ஸ்பெஷல் எடிஷன் காரின் செயல்திறனை கூட்டுகின்றது.

 
English summary
Ferrari F12 Berlinetta Tour de France Special Edition are introduced. These Special Edition Cars are based on the F12 Car's model.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark