ஃபியட் அபார்த் 595 பெர்ஃபார்மென்ஸ் கார் விற்பனைக்கு வந்தது!

Written By:

பெர்ஃபார்மென்ஸ் கார் விரும்பிகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அபார்த் பிராண்டில் முதல் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது ஃபியட் நிறுவனம். நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் அபார்த் 595 காம்படிஷன் மாடலை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஃபியட்.

மேலும், ஃபியட் அபார்த் 595 காம்படிஷன் மாடலைத் தொடர்ந்து, அடுத்ததாக புன்ட்டோ காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடலாக புன்ட்டோ அபார்த் கார் மாடலும் தீபாவளியையொட்டி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. டெல்லி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் புன்ட்டோ அபார்த் காரும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

 இறக்குமதி மாடல்

இறக்குமதி மாடல்

ஃபியட் அபார்த் 595 காம்படிஷன் மாடல் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

ஃபியட் அபார்த் 595 காம்படிஷன் மாடலில் 1.4 லிட்டர் டி- ஜெட் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 160 பிஎஸ் பவரையும், 230 என்எம் டார்க்கையும் வழங்கும். இது சாதாரண மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரைவிங் ஆப்ஷன்களில் ஓட்டும் தொழில்நுட்பமும் உள்ளது. ஸ்போர்ட்ஸ் மோடில் அதிக செயல்திறனை வெளிப்படுத்தும். இந்த காரில் ஆட்டமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. பேடில் ஷிஃப்ட் வசதியும் உள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

கருப்பு வண்ண லெதர் ஃபினிஷிங், ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி மற்றும் தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கைகள் என பிரிமியம் அம்சங்களும், நவீன தொழில்நுட்ப வசதிகளும் நிறைந்து காணப்படுகிறது. ஃபேப்ரிங் ரேஸிங் இருக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

வண்ணங்கள்

வண்ணங்கள்

சாம்பல், கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் புதிய அபார்த் 595 காம்படிஷன் கார் மாடல் கிடைக்கும்.

விலை

விலை

ரூ.29.85 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 
English summary
The long awaited Fiat Abarth 595 Competizione was launched in the country today, signalling the arrival of Fiat's iconic performance division, Abarth, to India. The Competizione hot hatch is the first product from Abarth, and precedes future models from the Italian firm.
Story first published: Tuesday, August 4, 2015, 13:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark