அறிமுகமான 10 நாட்களில், அபார்த் அவ்வென்சுரா காரின் விலை உயர்வு

By Ravichandran

அறிமுகம் செய்யபட்ட பத்தே நாட்களில் அபார்த் அவ்வென்சுரா காரின் விலை உயர்த்தபட்டுள்ளது.

ஃபியட் நிறுவனத்தின் சார்பாக அபார்த் அவ்வென்சுரா கார் அக்டோபர் 19, 2015-ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது. இது, 9.95 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அவ்வென்சுரா அறிமுகம் செய்யபட்ட 10 நாட்களில், அதன் விலை 10.01 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்-ஷோரூம் விலையை பொருத்த வரையில், இது பெரிய விலை உயர்வாக தோன்றவில்லை.

ஆனால், இந்தியாவை பொருத்த வரை, எந்த ஒறு வாகனமும் 10 லட்சம் ரூபாய் என்ற விலையை தாண்டும் போது, அவற்றிற்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம். இதனால், இவை இறுதி வாடிக்கையாளர்களை சென்றடைவதற்குள் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்குவது குறித்த முடிவு எடுப்பதில், பல விஷயங்கள் அடங்கியுள்ளது.

Fiat Abarth Avventura Price Hiked Within 10 Days Of Launch

அபார்த் அவ்வென்சுரா 1.4 லிட்டர், டி-ஜெட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 140 பிஹெச்பி-யும், உச்சபட்சமாக 210 என்எம் டார்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த பெர்ஃபார்மன்ஸ் கிராஸ்ஓவர், மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 9.9 நொடிகளில் எட்டிவிடும். அபார்த் அவ்வென்சுரா, ஒரு லிட்டருக்கு 17.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

அபார்த் ரேஞ்ஜில், ஃபியட் இந்தியா, 595 காம்பெடிஷன், அபார்த் புண்டோ மற்றும் அபார்த் அவ்வென்சுரா உள்ளிட்ட மூன்று மாடல்களை விற்று வருகின்றது. இதில், முதல் முறையாக, அபார்த் புண்டோ மற்றும் அபார்த் அவ்வென்சுரா உள்ளிட்ட இரு மாடல்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது என்பது சிறப்பான செய்தியாகும்.

அபார்த் அவ்வென்சுரா பெர்ல் வைட் மற்றும் எக்ஸாடிக் ரெட் எனும் இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றது. காரின் முன்பும், பின்பும் அபார்த்தின் லோகோக்கள் இருக்கும். மேலும், காரின் பின் கதவுகளில் "பவர்ட் பை அபார்த்" என்ற பேட்ஜ் பொருத்தப்பட்டிருக்கும்.

அபார்த் அவ்வென்சுரா ஸ்டாண்டர்ட் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. அபார்த் புண்டோ அல்லது அபார்த் அவ்வென்சுரா கார்களை இந்தியா முழுவதிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட டீசல்களிடம் இருந்து பெற்று கொள்ளலாம். தற்போதைய நிலையில் அபார்த் அவ்வென்சுரா காருக்கு, இந்திய வாகன சந்தையில், நேரடி போட்டியாக எந்த காரும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

Most Read Articles
English summary
Fiat Abarth Avventura Price Hiked Within 10 Days Of Launch. Abarth Avventura was launched in India by Fiat on October 19, 2015 and prices started at Rs. 9.95 lakh ex-showroom. Within ten days of launching this product, Fiat India has hiked the price for this crossover to Rs. 10.01 lakh ex-showroom (Delhi).
Story first published: Friday, October 30, 2015, 17:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X