அக்.19ல் ஃபியட் புன்ட்டோ அபார்த் கார் விற்பனைக்கு வருகிறது!

Written By:

வரும் 19ந் தேதி ஃபியட் புன்ட்டோ அபார்த் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ஹேட்ச்பேக் கார் மாடலாக வர இருக்கும், புன்ட்டோ அபார்த் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

தோற்றம் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களில் இந்தியர்களுக்கு புதிய பரவசத்தை வழங்க வரும் இந்த புதிய காரின் சிறப்பம்சங்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்

தோற்றம்

சாதாரண ஃபியட் புன்ட்டோ எவோ காரின் அடிப்படையிலான மாடல் என்றாலும், தோற்றத்திலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் இந்த புன்ட்டோ அபார்த் மாறுபட்டிருக்கும். அபார்த் பிராண்டின் தேள் சின்னத்துடன் கூடிய பேட்ஜ், தேள் சின்ன வடிவிலான 16 இன்ச் அலாய் வீல்கள், பாடி டீக்கெல்கள் போன்றவை நிச்சயமாக கார் விரும்பிகளின் மனதை கொள்ளை கொள்ளும்.

 எஞ்சின்

எஞ்சின்

சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. அதிகபட்மசாக 145 குதிரைசக்தி திறனை வழங்க வல்ல புதிய 1.4 லிட்டர் டி-ஜெட் பெட்ரோல் எஞ்சின் செயலாற்றும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். 0- 100 கிமீ வேகத்தை 8.8 வினாடிகளில் எட்டிப்பிடிக்கும்.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டியரிலும் மாறுதல்கள் இருக்கும். தையல் வேலைப்பாடுகளுடன் கூடி அப்ஹோல்ஸ்ட்ரி, ஸ்போர்ட்ஸ் பெடல்கள், ஸ்டீயரிங் வீலில் அபார்த் பேட்ஜ் என்று இன்டிரியரும் அசத்தலாக இருக்கும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

அதிசக்திவாய்ந்த இந்த காரை மிக செம்மையாக கையாளும் விதத்தில், சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் போன்ற வசதிகளும் உள்ளன. இந்த காரின் உயரமும் குறைக்கப்பட்டிருப்பதால், சிறந்த நிலைத்தன்மையை வழங்கும்.

 இது முக்கியம்...

இது முக்கியம்...

இந்த காரின் புகைப்போக்கி குழாய் சப்தமும், ரேஸ் கார்களை போன்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், பெர்ஃபார்மென்ஸ் கார் விரும்பிகளுக்கு ஓர் பர்ஃபெக்ட்டான மாடலாக இருக்கும்.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்த புதிய காரின் விலை ரூ.10 லட்சத்திற்குள் இருக்கும் என்று ஃபியட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரூ.50,000 முன்பணத்துடன் இந்த காருக்கு ஏற்கனவே முன்பதிவு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
English summary
Fiat Abarth Punto is confirmed to be launching their hot-hatch in the country on 19th of October 2015. Dealerships have commenced pre-booking of their performance hatchback across India.
Story first published: Friday, October 9, 2015, 15:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark