துருக்கியில் புதிய ஃபியட் செடான் கார் அறிமுகம்... அடுத்த தலைமுறை லீனியா?

Written By:

துருக்கி நாட்டுத் தலைநகர் இஸ்தான்புல் நகரில் துவங்கியிருக்கும் வாகன கண்காட்சியில் புதிய செடான் கார் மாடலை ஃபியட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய கார்தான் அடுத்த தலைமுறை ஃபியட் லீனியா மாடலாக வருவதாக கூறப்படுவதால், உலகின் பல்வேறு நாடுகளின் வாடிக்கையாளர்களையும், ஆட்டோமொபைல் துறையினரையும் இந்த செடான் கார் கவர்ந்துள்ளது. படங்கள், தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஃபியட் ஏஜியா

ஃபியட் ஏஜியா

ஃபியட் ஏஜியா என்ற பெயரில் அறிமுகம் செய்யபப்பட்டிருக்கும் இந்த புதிய செடான் காரின் டிசைன் ஃபியட் நிறுவனத்தின் வழமையான டிசைன் தாத்பரியங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. ஃபியட் பிராண்டுகளின் மொழுக்கையான டிசைனிலிருந்து மாறுபட்டிருக்கிறது. குறிப்பாக, இதுவரை ஃபியட் கார்களில் காணப்படாத அளவுக்கு முறுக்கலான பாடி லைன்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது.

முகப்பு

முகப்பு

புதிய க்ரில் அமைப்பு காருக்கு பிரிமியமான தோற்றத்தை தருகிறது. ஹெட்லைட் டிசைன் மிகவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. பம்பரும், பனிவிளக்குகள் அறையும் நேர்த்தியான டிசைன் கொண்ட மாடலாக காட்டுகிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

கருப்பு நிற இன்டிரியரில் ஆங்காங்கே சில்வர் வண்ண அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது பிற மாடல்களிலிருந்து முற்றிலும் புதிய அதேசமயம், ஆடம்பரமாக காட்சியளிக்கிறது.

டேஷ்போர்டு அமைப்பு

டேஷ்போர்டு அமைப்பு

டேஷ்போர்டு அமைப்பு பெரிதும் கவரும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. நவநாகரீக வடிவமைப்பு மற்றும் ஓட்டுனர் எளிதாக சுவிட்சுகளை கட்டுப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

பின்புறத் தோற்றம்

பின்புறத் தோற்றம்

பின்புறத்திலிருந்து மெல்ல மேலேறிச் செல்லும் கூரை அமைப்பு, சி வடிவ பின்புற சிவப்பு எச்சரிக்கை விளக்குகள், சிறப்பான வடிவமைப்பு கொண்ட பம்பர் ஆகியவை காரின் பின்புறத் தோற்றத்தை அழகாக்கியிருக்கிறது.

 
English summary
Fiat has unveiled its Linea successor at Istanbul Motor Show, it is more compact compared to existing Linea. They have christened this new model as Aegea Project and will be powered by a petrol and diesel engine.
Story first published: Friday, May 22, 2015, 13:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark