ஃபியட் ஏஜியா செடான் காரின் தயாரிப்பு நிலை மாடல் படங்கள்!

Posted By:

புதிய தலைமுறை ஃபியட் லீனியா காராக கருதப்படும், ஃபியட் ஏஜியா காரின் தயாரிப்பு நிலை மாடல் படங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மே மாதம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடந்த ஆட்டோ ஷோவில், இந்த புதிய ஃபியட் ஏஜியா காரின் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், துருக்கி டீலர்ஷிப்பில் நிறுத்தப்பட்டிருந்த ஃபியட் ஏஜியா காரின் தயாரிப்பு நிலை மாடலின் படங்கள் வெளியாகியுள்ளன.

முதலீடு

முதலீடு

துருக்கியிலுள்ள ஃபியட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் ஸ்டைல் சென்டரை சேர்ந்த 2,000 பணியாளர்கள் இணைந்து மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இந்த புதிய மாடலை உருவாக்கியுள்ளனர். இந்த புதிய மாடலை தயாரிப்பதற்காக ஒரு பில்லியன் டாலரை ஃபியட் க்றைஸ்லர் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சர்வதேச அளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் லீனியா காருக்கு மாற்றாக இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 டிசைன்

டிசைன்

இந்த புதிய ஃபியட் ஏஜியா செடான் கார் 4,500 மிமீ நீளம், 1,780மிமீ அகலமும், 1,480 மிமீ உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 2,640மிமீ வீல் பேஸ் கொண்ட இந்த கார் மிகச்சிறப்பான இடவசதியை அளிக்கும். மேலும், 510 லிட்டர் பூட்ரூம் கொண்டதாக இருக்கிறது. முகப்பில் ஹெட்லைட்டுடன் இணைந்த புதிய க்ரில் அமைப்பு, பக்கவாட்டில் மிரட்டலான பாடி லைன்கள், பின்புறத்தில் கவர்ச்சி ததும்பும் டெயில் லைட் க்ளஸ்ட்டருடன் முதல் பார்வையிலேயே க்ளீன் போல்டாக செய்கிறது.

வசதிகள்

வசதிகள்

உயர்தர இன்டிரியர், 5 இன்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல், ஃபியட் யுகனெக்ட் சிஸ்டம் போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டிருப்பதுடன், மிகச்சிறப்பான இடவசதியை அளிக்கும்.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இந்தியா வருகையில், தற்போது ஃபியட் லீனியா காரில் பயன்படுத்தப்படும் இரண்டு விதமான பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வரலாம். இதன் டீசல் மாடல் லிட்டருக்கு 25 கிமீ.,க்கும் அதிகமாக மைலேஜ் தரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹேட்ச்பேக் மாடல்

ஹேட்ச்பேக் மாடல்

இந்த புதிய ஃபியட் ஏஜியா கார் இந்தியாவில் ஃபியட் லீனியாவுக்கு மாற்றாக வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெற இருக்கும் ஜெனீவா மோட்டார் ஷோவில், இந்த காரின் ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது.

 

Photo source

English summary
Pictures of the Fiat Aegea production model has been spotted at a dealership in Turkey. The Aegea is rumored to replace the Fiat Linea in India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark