ஃபியட் நிறுவனத்தின் புதிய 5x5 ஆஃபர்!

Written By:

வாடிக்கையாளர்களுக்கு 5 விதமான பயன்களை ஒருங்கே தரும் புதிய திட்டம் ஒன்றை ஃபியட் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

5x5 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய திட்டம், வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த பயன்களை தரும்.

Fiat Offer
 

இந்த புதிய திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கான வாரண்டி, 5 இலவச சர்வீஸ், 5 ஆண்டுகளுக்கான அவசர சாலை உதவித் திட்டம் மற்றும் 5.5 வட்டி வீதத்தில் கடன் பெறும் சலுகை உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

தவிரவும், 5வது சலுகையாக வெளிநாட்டு சுற்றுலா செல்வதற்கான ஆஃபரையும் இந்த திட்டத்தின் கீழ் வழங்குகிறது ஃபியட். புதிய ஃபியட் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களில் தேர்வு செய்யப்படும் 5 தம்பதிகள் வெளிநாட்டு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பை பெறுவர்.

லீனியா செடான் கார்களுக்கு இந்த 5 சிறப்புச் சலுகைகளையும், பிற ஃபியட் கார்களை வாங்குவோர்க்கு 5.5 சதவீத வட்டி வீதத்தில் கடன் பெறும் திட்டம் கிடையாது. மற்ற 4 சலுகைகளையும் பெற முடியும்.

English summary
Italian based automobile manufacturer, Fiat is not doing particularly well in India. They have launched several products and are offering various schemes to lure in buyers. Now the manufacturer has launched a new scheme known as ‘5x5 Scheme'.
Story first published: Monday, March 9, 2015, 11:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark