வருகிறது லிமிடெட் எடிஷன் ஃபியட் புன்ட்டோ எவோ கார்!

Written By:

ஃபியட் நிறுவனம் புதிய லிமிடெட் எடிஷன் புன்ட்டோ எவோ காரை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த புதிய ஹேட்ச்பேக் கார் புன்ட்டோ எவோ ஸ்போர்டிவோ என்று பெயரிடப்பட உள்ளது. இதன் வடிவமைப்புகளிலும், அம்சங்களிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

புதிய புன்ட்டோ எவோ ஸ்போர்டிவோ, ‘ஆக்டிவ்' என்ற பேஸ் வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. ஸ்போர்டியான தோற்றம் கொடுக்கும் வகையில், இதன் வெளிப்புறத் தோற்றம் மேம்ப்டுத்தப்படுகிறது.

ஃபியட் நிறுவனத்தின் புதிய புன்ட்டோ எவோ ஸ்போர்டிவோ காரில், 15 இஞ்ச் அல்லாய் சக்கரங்கள், பிரத்யேக பாடி கிட், ரியர் ஸ்பாய்லர், ஸ்போர்டியான டீகேல்கள், காண்டிட்ராஸ்டிங் ரூஃப் கலர், குரோம் பூச்சு கொண்ட சைடு மிரர்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் உள்ளன.

இண்டீரியர் (உட்புற) அமைப்பை பொறுத்த வரை, புதிய புன்ட்டோ எவோ ஸ்போர்டிவோ கார், புதிய சீட் கவர்கள், டோர் சில் பிளேட்டுகள், புதிய மிதியடிகள், ரியர் பார்க்கிங் சென்ஸார்கள், நேவிகேஷன் மற்றும் புளுடூத் கனக்டிவிட்டி கொண்ட 6.5 இஞ்ச் டச்ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் வருகிறது.

ஃபியட் இந்தியா சார்பாக தற்போது கிடைக்கும் புன்ட்டோ எவோ ‘ஆக்டிவ்' வேரியண்ட்கள், பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் அமைப்புகளுடன் வருகின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட ஹேட்ச்பேக்கள் 4.99 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைகின்றது.

1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் இஞ்ஜின் கொண்ட புன்ட்டோ எவோ 5.95 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கின்றது. இந்த புதிய புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ற ஸ்டாண்டர்ட் இஞ்ஜின்களுடன் கிடைகின்றது.

பேஸ் வேரியண்ட்களை காட்டிலும், இந்த புதிய புன்ட்டோ எவோ ஸ்போர்ட்டிவோ கார் 20,000 முதல் 30,000 ரூபாய் வரையிலான கூடுதல விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. ஃபியட் இந்தியா, சமீபத்தில் அபார்த் புன்ட்டோ மற்றும் அபார்த் அவென்சுரா மாடல் கார்களை அபார்த் முத்திரையுடன் அறிமுகம் செய்தது.

புன்ட்டோ எவோ ஸ்போர்டிவோ கார், அபார்த் முத்திரையுடன் வெளியிடப்படும் மூன்றாவது காராக இருக்கும். அபார்த் புன்ட்டோ மற்றும் அபார்த் அவென்சுரா மாடல் கார்கள் ஃபியட் நிறுவனத்தின் ரஞ்ஜன்காவ் உற்பத்தி மையத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடதக்கது.

English summary
Fiat India will launch the Punto Evo in a limited-edition avatar soon. This new hatchback is most likely to be called as Punto Evo Sportivo and will have several features and design updates in it.
Please Wait while comments are loading...

Latest Photos