ரூ.15 லட்சத்தில் புதிய ஜீப் பிராண்டு எஸ்யூவியை களமிறக்கும் ஃபியட்!!

Written By:

இத்தாலியை சேர்ந்த ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்படும் அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் சொகுசு எஸ்யூவி தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்தநிலையில், ஜீப் எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் கொண்டு வருவதற்கு ஃபியட் தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால், பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு ஜீப் எஸ்யூவிகளின் அறிமுகத்தை ஃபியட் க்றைஸ்லர் குழுமம் தள்ளி போட்டு வருகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நொய்டாவில் நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் தனது எஸ்யூவி மாடல்களை பார்வைக்கு வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த எஸ்யூவி மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஜீப் பிராண்டு எஸ்யூவிகளுக்கு இந்தியாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால், விலை அதிகமாக இருக்கும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. அதனை தகர்க்கும் விதத்தில், ரூ.15 லட்சத்தில் இந்தியாவுக்கான ஒரு புது எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய ஃபியட் திட்டமிட்டிருக்கிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

குறியீட்டு பெயர்

குறியீட்டு பெயர்

இந்திய மார்க்கெட்டுக்கு ஏற்ற C SVU என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்ய ஃபியட் திட்டமிட்டிருக்கிறது. இது மிகச்சிறந்த ஆஃப்ரோடு மாடலாக இருக்கும் என்பதே எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

2017ம் ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய சி எஸ்யூவி புதிய பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது பெரும் வரவேற்பை பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

இறக்குமதி

இறக்குமதி

புதிய சி எஸ்யூவி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஜீப் செரோக்கீ மற்றும் ரேங்க்லர் எஸ்யூவி மாடல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது.

 இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவில் உற்பத்தி

ஆரம்ப கட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்டாலும், சிறிது காலத்திற்குள் ரஞ்சன்கவுனிலுள்ள ஃபியட் ஆலையில் ஜீப் பிராண்டு அசெம்பிள் செய்யப்பட உள்ளன. ஜீப் பிராண்டு எஸ்யூவிகள் உற்பத்திக்காக ரூ.2,500 கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாக ஏற்கனவே ஃபியட் க்றைஸ்லர் குழுமம் அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யவும் ஃபியட் வசம் திட்டமிருக்கிறது.

விலை குறையும்

விலை குறையும்

இப்போது ஜீப் செரோக்கீ எஸ்யூவியை இறக்குமதி செய்து வாங்க முடியும். ஆனால், 180 சதவீதம் இறக்குமதி வரி சேரும்போது ஜீப் செரோக்கீ விலை ரூ.50 லட்சத்தை தாண்டும். ஆனால், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும்போது ஜீப் செரோக்கீ உள்ளிட்ட மாடல்களின் விலை வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது.

பிரத்யேக டீலர்கள்

பிரத்யேக டீலர்கள்

ஜீப் எஸ்யூவிகளை பிரத்யேக டீலர்கள் வழியாக விற்பனை செய்ய ஃபியட் திட்டமிட்டிருக்கிறது. பெருநகரங்களை குறிவைத்து இந்த புதிய எஸ்யூவிகள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில், ஆரம்ப நிலையில் ஃபியட் டீலர்கள் வாயிலாக ஆர்டர் பெற்றும் டெலிவிரி கொடுக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

 
English summary
Fiat plans to launch Affordable new SUV in India.
Story first published: Wednesday, August 5, 2015, 12:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark