லீனியா காரின் அபார்த் பெர்ஃபார்மென்ஸ் மாடலையும் களமிறக்க ஃபியட் திட்டம்!

Written By:

இந்தியாவில் அபார்த் பெர்ஃபார்மென்ஸ் கார் குடும்பத்தில் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்த ஃபியட் திட்டமிட்டுள்ளது.

விரைவில் புன்ட்டோ அபார்த் கார் வர இருக்கும் நிலையில், அடுத்ததாக அவென்ச்சுரா அபார்த் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஃபியட் புன்ட்டோ அபார்த்
 

இதைத்தொடர்ந்து, லீனியா அபார்த் மாடலையும் அறிமுகம் செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது.

புன்ட்டோ அபார்த் மாடலின் அடிப்படையில், லீனியா அபார்த் மாடல் உருவாக்கப்படும் என்பதால், தயாரிப்பு செலவு குறைவாக இருக்கும்.

எனவே, இந்த திட்டத்தை ஃபியட் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. புன்ட்டோ அபார்த் காரில் இடம்பெறும் அதே 1.4 லிட்டர் டி-ஜெட் பெட்ரோல் எஞ்சின்தான் லீனியா அபார்த் காரிலும் இடம்பிடிக்கும்.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 145 பிஎஸ் பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

இதுதவிர்த்து, பின்சக்கரங்களுக்கு டிஸ்க் பிரேக் சிஸ்டம், புதிய சஸ்பென்ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும். காரின் கிரவுண்ட் கிளிரயன்ஸும் 20 மிமீ வரை கூட்டப்படும்.

இதன்மூலம், அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட இந்த கார் சிறப்பான கையாளுமையையும் வழங்கும். வழக்கம்போல் அபார்த் பிராண்டு ஸ்டிக்கர்கள், அலாய் வீல்கள் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம்.

English summary
Fiat is planning to launch Linea Abarth model in India.
Story first published: Saturday, September 19, 2015, 10:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark