ஓரங்கட்டேய்... வருகிறது பவர்ஃபுல் ஃபியட் புன்ட்டோ 'அபார்த்'...!!

Written By:

இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் அதிசக்திவாய்ந்த புன்ட்டோ அபார்த் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஃபியட் திட்டமிட்டிருக்கிறது.

இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டால், இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ஹேட்ச்பேக் கார் என்ற பெருமை புன்ட்டோ அபார்த் மாடலுக்கு கிடைக்கும். என்ன புன்ட்டோ அபார்த் ஆர்வத்தை தூண்டுகிறதா, வாருங்கள் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

01. அபார்த் பிராண்டு

01. அபார்த் பிராண்டு

ஃபியட் நிறுவனத்தின் அதிசக்திவாய்ந்த பெர்ஃபார்மென்ஸ் கார்கள் அபார்த் பிராண்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அபார்த் பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்து தனது இமேஜை உயர்த்திக் கொள்ள ஃபியட் தீவிரம் காட்டி வருகிறது.

 02. இந்தியாவுக்கான அபார்த் மாடல்கள்

02. இந்தியாவுக்கான அபார்த் மாடல்கள்

அபார்த் பிராண்டில் முதலாவதாக, அபார்த் 500 மாடல் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. அடுத்து புன்ட்டோ அபார்த் மாடலும், அவென்ச்சுரா அபார்த் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. இதில், பலரையும் ஏக்கத்துடன் காத்திருக்க செய்துள்ள புன்ட்டோ அபார்த் பற்றிய தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

 03. இந்தியாவில் புன்ட்டோ அபார்த்...

03. இந்தியாவில் புன்ட்டோ அபார்த்...

இந்தியாவில் இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டு டீலரில் வைக்கப்பட்டிருப்பதை புகைப்படம் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது டீம் ஃபியட் மோட்டோ கிளப் அமைப்பு. எனவே, இந்த கார் விரைவில் வருவது உறுதியாகியுள்ளது.

04. எஞ்சின்

04. எஞ்சின்

புன்ட்டோ அபார்த் காரின் அதிசக்திவாய்ந்த எஞ்சின்தான் பலரின் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. தற்போது சாதாரண புன்ட்டோ எவோ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் எஞ்சின் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இந்த நிலையில், புன்ட்டோ அபார்த் கார் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.

05. செயல்திறன்

05. செயல்திறன்

புன்ட்டோ அபார்த் காரின் டி-ஜெட் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 135 பிஎஸ் சக்தியையும், 206 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. அதிசக்திவாய்ந்த இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 8 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது.

06. எதிர்பார்க்கும் விலை

06. எதிர்பார்க்கும் விலை

ரூ.10 லட்சம் விலையில் ஃபியட் புன்ட்டோ அபார்த் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

07. இந்தியாவின் 'ஹாட்' ஹேட்ச்பேக்...

07. இந்தியாவின் 'ஹாட்' ஹேட்ச்பேக்...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ ஜிடி டிஎஸ்ஐ பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. ஃபியட் புன்ட்டோ அபார்த் அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், போலோ ஜிடி டிஎஸ்ஐ மாடலைவிட அதிக சக்திகொண்ட மாடலாக இருக்கும்.

08. ரசிகர் வட்டம்

08. ரசிகர் வட்டம்

இந்த காரின் செயல்திறனை சுவைப்பதற்கும், தங்களின் தாகத்தை தீர்த்துக் கொள்வதற்கும் இதற்கென தனி ரசிகர்கள் இந்த காரை வரவேற்க காத்திருக்கின்றனர்.

 
English summary
Fiat India is planning to launch more powerful version of the Punto model under its performance brand 'Abarth' in India.
Story first published: Monday, April 20, 2015, 12:31 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark