ஃபியட் புன்ட்டோ அபார்த்... தீபாவளிக்கான ஃபியட் பட்டாசு!

By Saravana

டெல்லி, அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த நிகழ்ச்சியில், ஃபியட் நிறுவனத்தின் அபார்த் பிராண்டில் முதல் கார் மாடல் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது, அபார்த் பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் வர இருக்கும் அடுத்த கார் மாடலான புன்ட்டோ அபார்த் காரும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்த காரின் பிரத்யேக படங்களும், தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

பெர்ஃபார்மென்ஸ் ரக மாடல்

பெர்ஃபார்மென்ஸ் ரக மாடல்

தற்போது விற்பனையில் இருக்கும் ஃபியட் புன்ட்டோ எவோ காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடலாக, புன்ட்டோ அபார்த் கார் வர இருக்கிறது.

ஸ்டைல்

ஸ்டைல்

புன்ட்டோ அபார்த் காரின் வெளிப்புறத்தில் அபார்த் பிராண்டின் பேட்ஜ், புதிய க்ரில் அமைப்பு, பம்பர் மற்றும் வண்ணக் கலவைகளால் கலக்கலாக இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

லீனியா காரில் இருக்கும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு டி- ஜெட் பெட்ரோல் எஞ்சின் இந்த புதிய புன்ட்டோ அபார்த் காரில் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்கும்.

செயல்திறன்

செயல்திறன்

புன்ட்டோ அபார்த் காரின் டி- ஜெட் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 135 பிஎஸ் பவரையும், 206 என்எம் டார்க்கையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 8 வினாடிகளில் எட்டிவிடும்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

அதிக செயல்திறன் மிக்க டி- ஜெட் எஞ்சின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் மாற்றங்களுடன் கூடிய பிரத்யேக சஸ்பென்ஷன் அமைப்பை கொண்டிருக்கும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.10 லட்சம் விலையில் புதிய ஃபியட் புன்ட்டோ அபார்த் கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி நெருக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Most Read Articles
English summary
The Fiat Punto Abarth was revealed today at the launch of the Fiat Abarth 595 Competizione at the Buddh International Circuit. However, not much was revealed about the new ‘warm hatch' that's set to enter the country. Here's what we know:
Story first published: Wednesday, August 5, 2015, 20:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X