எதிர்பார்த்தபடி இல்லை... ஃபோர்டு ஆஸ்பயர் புக்கிங் பிசுபிசுத்தது...!!

Written By:

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் முன்பதிவு எண்ணிக்கை ஃபோர்டு எதிர்பார்ப்பைவிட குறைவாகத்தான் இருந்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் 27ந் தேதி ஃபோர்டு ஆஸ்பயர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் புதிய வரவு என்பதால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

ஃபோர்டு கார்
 

மேலும், மூன்றுவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில், ஏராளமான தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் வந்ததால், போட்டியாளர்களுக்கு நெருக்கடி தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இதுவரை 4,000 ஆஸ்பயர் கார்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டியாளர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இது மிக குறைவு.

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் வரவு காரணமாக, ஃபோர்டு கிளாசிக் செடான் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதுபோன்று, புதிய தலைமுறை ஃபிகோ கார் விரைவில் வர இருப்பதால், தற்போதைய ஃபிகோ காரின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுவிட்டது.

English summary
Ford Aspire Gets 4000+ Booking Since Launch.
Story first published: Thursday, September 3, 2015, 17:58 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark