புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் அதிகாரப்பூர்வ படங்கள், கூடுதல் விபரங்கள்

Written By:

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் காரின் அதிகாரப்பூர்வ படங்கள், தகவல்களும் வெளியாகி போட்டியாளர்களை மிரள வைத்துள்ளன. சிறப்பான டிசைன் மற்றும் வசதிகளுடன் போட்டியாளர்களைவிட ஓர் சிறந்த மாடலாக நிலைநிறுத்த ஃபோர்டு திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு அடுத்து, இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனையில் நிச்சயம் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் சில வெளிப்புற தோற்றத்தின் படங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன. சரிவக வடிவ முகப்பு க்ரில் அமைப்பு, கம்பீரமான பானட் மற்றும் ஹெட்லைட் டிசைன் ஆகியவை ஓர் அம்சமான கார் என்ற உணர்வை தருகிறது. மேலும், பக்கவாட்டிலும், பின்புறத்திலும் கூட ஒரு முழுமையான செடான் டிசைன் என்ற உணர்வை தருகிறது. இதெல்லாம் தெரிந்த விஷயம்தான். இப்போது வெளியாகி இருக்கும், உள்புறத்தை பற்றிய படங்கள்தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் ஃபியஸ்ட்டா காரின் டேஷ்போர்டு அமைப்புதான் என்றாலும், இந்த காரில் சில மாற்றங்கள் உள்ளன. பீஜ் மற்றும் கருப்பு நிற இன்டிரியர் ஃபினிஷ் பிரிமியம் உணர்வை தருவதாக இருக்கும். டியூவல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்ட சென்டர் கன்சோல் கவர்ச்சியாக இருக்கிறது.

சென்டர் கன்சோல்

சென்டர் கன்சோல்

ஈக்கோஸ்போர்ட்டை விட சற்று பெரிய திரை சென்டர் கன்சோல் மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், டாப் வேரியண்ட்டில் ஃபோர்டு சிங்க் சிஸ்டமும், பேஸ் மாடலில் மொபைல்போன் டாக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும். இதில், மொபைல்போனை வைத்து, என்டர்டெயின்மென்ட் சிஸ்டத்தை இயக்க முடியும். அத்துடன், நேவிகேஷன் சாதனைத்தைகூட வைத்துக்கொள்ளலாம்.

வசதிகள்

வசதிகள்

டாப் வேரியண்ட்டில் ஃபோர்டு சிங்க் தொடர்பு வசதி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல், 12V சார்ஜர் போன்ற வசதிகள் இருக்கும். இந்த கார் எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் கொண்டதாக வருவதால், ஃபியஸ்ட்டா போன்றே சிறப்பான ஃபீட்பேக்கை வழங்கும்.

சூப்பர்பா...

சூப்பர்பா...

இந்த காருக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஸ்மார்ட் சாவி வழங்கப்பட உள்ளது. ஃபோர்டு MyKey என்ற நவீன வகை சாவி மூலம் காரின் காரின் வேகத்தையும், மியூசிக் சிஸ்டத்தின் வால்யூம் கன்ட்ரோலையும் குறிப்பிட்ட வரம்புக்குள் கட்டுப்படுத்த முடியும். இது பிள்ளைகளிடம் அல்லது நண்பர்களிடம் கார் வழங்குவோர்க்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், சீட்பெல்ட் அணிவதை எச்சரிக்கும் வசதியையும் கொண்டிருக்கும்.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. மேலும், பெட்ரோல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் வருகிறது.

ஏர்பேக்ஸ்

ஏர்பேக்ஸ்

காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் முதல்முறையாக கர்ட்டெயின் எனப்படும் பக்கவாட்டு ஏர்பேக் பொருத்தப்பட்ட வரும் முதல் கார் மாடல் இது. மேலும், டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதர பாதுகாப்பு வசதிகள்

இதர பாதுகாப்பு வசதிகள்

இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரொகிராம், ஹில் அசிஸ்ட் போன்றவை கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக இருக்கும்.

 
English summary
Ford Aspire Official Images And Details Revealed.
Story first published: Wednesday, May 6, 2015, 10:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark