விற்பனையில் சாதனை: ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு சிறப்புச் சலுகைகள்!!

Written By:

இந்தியாவில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் விற்பனை 2 லட்சத்தை தாண்டி, புதிய சாதனை படைத்திருக்கிறது. உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியை சேர்த்து இந்த புதிய சாதனையை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எட்டியிருக்கிறது.

இந்த விற்பனை சாதனையை கொண்டாடும் விதத்தில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

For Ecosport
 

நாளை வரை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் எல்இடி டிவி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக பெறும் வாய்ப்பை பெறுவர்.

மொத்தம் 5 கோடி பெறுமானத்திற்கு இந்த பரிசு திட்டத்தை ஃபோர்டு அறிவித்துள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த தேர்வாக ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விளங்கி வருகிறது.

சிறந்த டிசைன், மூன்றுவிதமான எஞ்சின் ஆப்ஷன்கள், வசதிகள் ஆகியவை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மீதான ஈர்ப்பை தொடர்ந்து தக்க வைத்து வருகின்றன.

English summary
Ford India has managed to sell over 2,00,000 compact SUVs in the country. The American based automobile manufacturer has decided to celebrate this sales milestone with its customers.
Story first published: Saturday, August 22, 2015, 11:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark