ஆக்ஸில் உடைந்து விபத்தில் சிக்கிய ஈக்கோஸ்போர்ட்... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

By Saravana

வாங்கிய இரண்டு வாரங்களில், புத்தம் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் ஆக்ஸில் உடைந்து விபத்தில் சிக்கிய சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால், இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், அதன் உரிமையாளருக்கு பல லட்ச ரூபாய் ரிப்பேர் எஸ்டீமேட் போட்டு ஃபோர்டு டீலர் மற்றொரு அதிர்ச்சியை போனசாக கொடுத்துள்ளார்.

ஒரு மாசம் கூட ஆகலை...

ஒரு மாசம் கூட ஆகலை...

பெங்களூரை சேர்ந்த பூர்ணிமா கிருஷ்ணன் என்பவர் இந்த தகவல்களை டீம் பிஎச்பி தளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். கடந்த மாதம் 14ந் தேதிதான் அந்த புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் டெலிவிரி எடுக்கப்பட்டிருக்கிறது.

விபத்து

விபத்து

ஆசை ஆசையாய் வாங்கிய தனது புத்தம் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் கடந்த 31ந் தேதி பெங்களூரிலிருந்து சிருங்கேரிக்கு அதன் உரிமையாளர் சென்றிருக்கிறார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஹெரூர் என்ற இடத்தில் அந்த கார் மோசமான விபத்தில் சிக்கியது.

சாதுர்யமாக நிறுத்திய ஓட்டுனர்

சாதுர்யமாக நிறுத்திய ஓட்டுனர்

கார் வேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அதன் முன்புற ஆக்ஸில் உடைந்து முன்புறம் தரையில் உராய்ந்து சென்றது. ஓட்டியவர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக காரை சாதுர்யமாக நிறுத்திவிட்டார்.

கடும் சேதம்

கடும் சேதம்

முன்புற ஆக்சில் உடைந்ததையடுத்து, இடது முன்புற பக்கம் தரையில் உராய்ந்து, அந்த காரின் முன்புற அலாய் சக்கரம், ஸ்டீயரிங் சிஸ்டம், சஸ்பென்ஷன் உள்ளிட்ட பாகங்கள் கடுமையாக சேதமடைந்தது.

 அதிர்ஷ்டவசம்...

அதிர்ஷ்டவசம்...

போக்குவரத்து குறைவாக இருந்ததாலும், நேரான சாலையில் சென்றபோதும் விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால், அதிர்ஷடவமாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர். இதுவே வளைவுகளில் விபத்து ஏற்பட்டிருந்தால், மோசமான இழப்புகளை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

தயாரிப்பு குறைபாடு

தயாரிப்பு குறைபாடு

கார் சமதளமான சாலையில்தான் சென்றுள்ளது. அத்துடன், அந்த சாலையில் வேகத்தடைகள் எதுவும் இல்லை. எனவே, தயாரிப்பு குறைபாடு காரணமாகவே கார் விபத்தில் சிக்கியதாக கருதப்படுகிறது. ஆனால், அந்த கார் உரிமையாளருக்கு மற்றொரு அதிர்ச்சியை டீலர் வழியாக கிடைத்திருக்கிறது.

மற்றொரு அதிர்ச்சி...

மற்றொரு அதிர்ச்சி...

காரின் முன்புற ஆக்சில், ஸ்டீயரிங் சிஸ்டம், சஸ்பென்ஷன் பாகங்கள், அலாய் சக்கரம் மற்றும் காரின் அடிப்பாகத்திலும் அதிக சேதமடைந்திருக்கின்றன. இவற்றை சரிசெய்து தருவதற்கு ரூ.3.4 லட்ச் எஸ்டீமேட் கொடுத்து உரிமையாளரை தலை சுற்ற வைத்திருக்கிறார் மங்களூரை சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான காவேரி ஃபோர்டு.

ஃபோர்டு மவுனம்

ஃபோர்டு மவுனம்

இதுதொடர்பாக, ஃபோர்டு நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை எந்தவொரு உரிய பதிலும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இது அந்த நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கும் செயலாகவே இருக்கிறது.

ரீகால்

ரீகால்

போர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களின் பின்புற சஸ்பென்ஷனில் இருக்கும் பிரச்னையால் சில நாட்களுக்கு முன் ரீகால் செய்யப்பட்டிருப்பது நினைவிருக்கலாம். இந்த சூழலில் நடந்திருக்கும் இந்த விபத்தும், அந்த நிறுவனத்தின் தயாரிப்பு நிலை குறைபாடாகவே கருதப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து, ஃபோர்டு நிறுவனம் வாடிக்கையாளருக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களும், ஈக்கோஸ்போர்ட் வாடிக்கையாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Via - Team BHP

Most Read Articles
English summary
Ford EcoSport Axle Breaks, Collapses on Highway.
Story first published: Tuesday, November 17, 2015, 12:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X