சென்னை ஃபோர்டு ஆலையில் ஒரு மில்லியன் கார்கள் உற்பத்தி

Written By:

சென்னை அருகே மறைமலை நகரில் அமைந்துள்ள ஃபோர்டு ஆலையில் ஒரு மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. மேலும், உற்பத்தி பிரிவிலிருந்து ஒரு மில்லியனாவது காராக ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வெளிவந்தது.

1999ம் ஆண்டு சென்னையில் அமைக்கப்பட்ட ஃபோர்டு கார் ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டது. உற்பத்தியில் தொடர்ந்து பல மைல்கல்களை இந்த ஆலை தொட்டு வந்தது. இந்த நிலையில், கார் உற்பத்தியில் மட்டுமின்றி, ஃபோர்டு நிறுவனம் வேறு ஒரு சாதனையும் நிகழ்த்தியுள்ளது.

இந்தியாவில், இந்நிறுவனத்தின் ஒரு மில்லியனாவது இஞ்ஜினும் தயாரிக்கப்பட்டுள்ளதே அந்த மைல்கல் ஆகும். சென்னையில் தயாரிக்கப்படும் வாகனங்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பயணியர் வாகனங்கள் தொடர்பான தங்களின் உற்பத்தி மையத்தின் நடவடிக்கைகளை, ஃபோர்ட் நிறுவனம் 1999-ஆம் ஆண்டிலியே துவங்கியது. ஃபோர்டு நிறுவனம், தற்போது என்டெவர், ஈக்கோஸ்போர்ட் மற்றும் ஃபியஸ்ட்டா உள்ளிட்ட மாடல் கார்களை சென்னையில் உற்பத்தி செய்து வருகிறது.

சென்னையில் உள்ள இந்த கார் தயாரிப்பு மையத்தை நிறுவ ஃபோர்டு நிறுவனம் சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளது. தனித்தனி இஞ்ஜின் மற்றும் வாகன உற்பத்தி பிரிவுகள் உள்ள இந்த சென்னை உற்பத்தி மையம், 350 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.

Ford EcoSport Is the One Millionth Vehicle To Roll Out Of Chennai Facility

2008-ல் இஞ்ஜின் அசெல்ம்பிளியை துவக்கிய ஃபோர்டு, பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின்களை தயாரிக்கிறது. இந்த ஒருங்கிணைந்த உற்பத்தி மையத்தில், ஒரு ஆண்டிற்கு 3,40,000 இஞ்ஜின்களும், 2,00,000 கார்களும் தயாரிக்க கூடிய உற்பத்தி திறன் உள்ளது.

இந்த சென்னை ஃபோர்ட் உற்பத்தி மையத்திற்கு வேறு சில சிறப்பம்சங்களும் உள்ளன. இந்த சென்னை உற்பத்தி மையத்தில் இருந்து வெளியாகும் அபாயகரமான கழிவுகள், மறுசுழற்சி செய்யப்படுகிறது அல்லது சிமெண்ட் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

சென்னை ஃபோர்டு உற்பத்தி மையத்தின் தண்ணீர் உபயோகம் 30 சதவிகிதமும், மின்சார உபயோகம் 16 சதவிகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு பயன்படுத்தப்படும் நீர், 100 சதவீதம் மீண்டும் மறுசுழற்சி செய்யபட்டு மீண்டும் உபயோகபடுத்த படுகிறது எனபது குறிப்பிடதக்கது.

1 மில்லியனாவது இஞ்ஜின் மற்றும் வாகன வெளியீட்டின் போது, சென்னை ஃபோர்டு ஆலையின் தலைமை அதிகாரி பாலசுந்தரம் ராதாகிருஷ்ணன் பங்கு கொண்டு, பெருமிததை பகிர்ந்து கொண்டார்.

சென்னை ஃபோர்ட்டில் தற்போதைய நிலையில், 6,000 பேர் பணி செய்கின்றனர். இங்கிருந்து தயாரிக்கபடும் வாகனங்கள் சுமார் 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மட்டுமின்றி, குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்த் தொழிற்பேட்டையில் புதிய ஆலையை ஃபோர்டு நிறுவியது. கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட இந்த ஆலையில், தற்போது ஃபோர்டு ஆஸ்பயர் மற்றும் ஃபோர்டு ஃபிகோ கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

English summary
Ford EcoSport Is One Millionth Vehicle To Roll Out Of Chennai Facility. Ford's Chennai facility also achieved another milestone by producing one million engines in India. Ford exports its products to over 40 countries from their Chennai manufacturing unit.
Story first published: Saturday, November 7, 2015, 15:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark