Subscribe to DriveSpark

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் வேரியண்ட் விபரம்... உங்களுக்காக பிரத்யேக தகவல்கள்!

Written By:

ராஜஸ்தான், மாநிலம் உதய்பூரில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரை டெஸ்ட் டிரைவ் செய்து வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்த நிகழ்வின்போது ஃபோர்டு வட்டாரங்களில் வினவியபோது கிடைத்த பிரத்யேக தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

காம்பேக்ட் செடான் காரை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஃபோர்டு ஆஸ்பயர் நிச்சயம் சிறப்பான தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் என்பது தெரிகிறது. ஏனெனில், பேஸ் மாடல் முதல் அனைத்து வேரியண்ட்டுகளும் சிறப்பான பாதுகாப்பு மற்றும் வசதிகளுடன் வருகிறது.

எனவே, புதிய ஃபோர்டு ஆஸ்பயரை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் விதத்தில், இந்த காரின் வேரியண்ட் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
 4 வேரியண்ட்டுகள்

4 வேரியண்ட்டுகள்

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வருவது தெரிந்ததே. இந்த கார் 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. Ambiente, Trend, Titanium மற்றும் Titanium+ ஆகிய வேரியண்ட் பெயர்களில் வருகிறது.

டியூவல் ஏர்பேக்ஸ் ஸ்டான்டர்டு

டியூவல் ஏர்பேக்ஸ் ஸ்டான்டர்டு

பேஸ் மாடல் உள்பட அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்ஸ் கொடுக்கப்பட்டிருப்பது கவனத்தில் கொள்க. தற்போது எந்த காம்பேக்ட் செடானின் பேஸ் மாடலிலும் டியூவல் ஏர்பேக்ஸ நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இல்லை. எனவே, சிறந்த பாதுகாப்பு கொண்ட பேக்கேஜ் கொண்ட காம்பேக்ட் செடானாக வருகிறது.

 ஆம்பியன்ட் சிறப்பம்சங்கள்

ஆம்பியன்ட் சிறப்பம்சங்கள்

ஆம்பியன்ட் என்பது பேஸ் மாடலாக வருகிறது. இந்த வேரியண்ட்டில் 14 இன்ச் ஸ்டீல் வீல், ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி, முன்புற கதவுகளுக்கான பவர் விண்டோஸ், டில்ட் அட்ஜெஸ்ட் ஸ்டீயரிங், எஞ்சின் இம்மொலைசர், ரிமோட் லாக்கிங், ஏசி, பின்புற பனி விளக்குகள், காரை நிறுத்திய பின்பும் சிறிது நேரம் ஒளிரும் வசதி கொண்ட கெய்டு மீ ஹோம் லைட்ஸ் ஆகியவை சிறப்பம்சங்களாக இருக்கும்.

ட்ரென்ட் சிறப்பம்சங்கள்

ட்ரென்ட் சிறப்பம்சங்கள்

ட்ரென்ட் என்பது நடுத்தர வகை மாடலாக வருகிறது. ஆம்பியன்ட் வேரியண்ட்டில் உள்ள அனைத்து வசதிகளுடன் சேர்த்து கூடுதல் வசதிகளை பெற்றிருக்கிறது. அனைத்து கதவுகளுக்கும் பவர் விண்டோஸ், யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட், புளூடூத் வசதி, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொண்ட மியூசிக் சிஸ்டம், மைஃபோர்டு டாக்கிங் ஸ்டேஷன், சென்டர் ஆர்ம்ரெஸ்ட், இன்டிகேட்டர் விளக்குகள் மற்றும் எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ கண்ணாடிகள் மற்றும் டாக்கோ மீட்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.

டைட்டானியம் சிறப்பம்சங்கள்

டைட்டானியம் சிறப்பம்சங்கள்

இது மிட் வேரியண்ட்டிற்கும், டாப் வேரியண்ட்டிற்கும் இடையிலான மாடல். ஆம்பியன்ட், ட்ரென்ட் வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகளை சேர்த்து கூடுதல் வசதிகள் டைட்டானியம் வேரியண்ட்டில் இருக்கும். இந்த வேரியண்ட்டில் க்ளைமேட் கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், சீட்பெல்ட் ரிமைன்டர் வசதி, அட்ஜெஸ்ட் வசதியுடன் சீட் பெல்ட், டிரைவர் இருக்கையின் உயரத்தை கூட்டி குறைக்கும் வசதி, ரியர் டீஃபாகர் மற்றும் 14 இன்ச் அலாய் வீல்கள் போன்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

டைட்டானியம் ப்ளஸ் சிறப்பம்சங்கள்

டைட்டானியம் ப்ளஸ் சிறப்பம்சங்கள்

இதுதான் டாப் வேரியண்ட்டில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்ட மாடல் இது. லெதர் இருக்கைகள், 4.2 இன்ச் திரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிங்க் அப்ளிகேஷன், ஃபோர்டு மைகீ என்ற ஸ்மார்ட் சாவி, எமர்ஜென்சி அசிஸ்ட் ஆகியவை உள்ளன. இந்த வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்ஸ் தவிர்த்து சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள் இருக்கும்.

நெருக்கடி

நெருக்கடி

ஃபோர்டு ஆஸ்பயரின் வசதிகள் நிச்சயம் போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை தரும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், பேஸ் மற்றும் மிட் வேரியண்ட்டுகளிலேயே போதுமான வசதிகளை பெற்றிருக்கிறது. விலையை மட்டும் சரியாக நிர்ணயித்துவிட்டால், ஃபோர்டு ஆஸ்பயர் வாடிக்கையாளர்களிடம் பேராதரவை பெறும் என்று நம்பலாம்.

 
English summary
Ford will be offering three engine options, along with their all-new Figo Aspire model. Good news is that the manufacturer will be offering dual front airbags as standard safety equipment.
Story first published: Thursday, July 16, 2015, 14:06 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark