ரூ.4.29 லட்சம் விலையில் புதிய ஃபோர்டு ஃபிகோ விற்பனைக்க அறிமுகம்- முழு விபரம்

By Saravana

ரூ.4.29 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் புதிய ஃபோர்டு ஃபிகோ கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ கார் சற்று நேரத்திற்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய மார்க்கெட்டில் மிக வெற்றிகரமான ஹேட்ச்பேக் மாடல்களில் ஒன்றான முதலாம் தலைமுறை ஃபிகோ காரின் இடத்தை தக்க வைக்க கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ களமிறக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு பெட்ரோல், ஒரு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிடைக்கும். இந்த புதிய ஃபிகோ கார் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் பேஸ், ஆம்பியன்ட், ட்ரென்ட், ட்ரென்ட் ப்ளஸ், டைட்டானியம், டைட்டானியம் ப்ளஸ் என தலா 6 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் டைட்டானியம் என்ற ஒரேயொரு வேரியண்ட்டில் கிடைக்கும்.

1.2லி பெட்ரோல் எஞ்சின்

1.2லி பெட்ரோல் எஞ்சின்

புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் பெட்ரோல் மாடலில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 87 பிஎச்பி பவரையும், 112 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

 1.5லி பெட்ரோல் எஞ்சின்

1.5லி பெட்ரோல் எஞ்சின்

1.5லி பெட்ரோல் மாடல்அடுத்து, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 136 என்எம் டார்க்கையும் வழங்கும். இதன்மூலம், அதிசக்திவாய்ந்த ஹேட்ச்பேக் காராக உருவெடுத்துள்ளது. இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும்.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

சமீபத்தில் வந்த ஃபோர்டு ஆஸ்பயர் காம்பேக்ட் செடானில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த புதிய ஃபிகோ காரில் இடம்பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க்கையும் வழங்கும். இது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

  • 1.2 லி பெட்ரோல்: 18.16 கிமீ/லி
  • 1.5லி பெட்ரோல்: 17.0 கிமீ/லி
  • 1.5லி டீசல்: 25.83 கிமீ/லி
  • வசதிகள்

    வசதிகள்

    இரட்டை வண்ண டேஷ்போர்டு, அவசர காலத்தில் உதவும் ஃபோர்டு சிங்க் தொழில்நுட்பம், க்ளைமேட் கன்ட்ரோல், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள் போன்றவை முக்கிய வசதிகளாக இருக்கின்றன.

    பாதுகாப்பு அம்சங்கள்

    பாதுகாப்பு அம்சங்கள்

    அனைத்து வேரியண்ட்டுகளில் டியூவல் ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு அம்சமாகவும், டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார் நிலைத்தன்மையுடன் செல்வதற்கான எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரொகிராம் ஆகிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

    வண்ணங்கள்

    வண்ணங்கள்

    ஆக்ஸ்ஃபோர்டு ஒயிட், டக்ஸிடோ பிளாக், ரூபி ரெட், ஸ்பார்க்ளிங் கோல்டு, இன்காட் சில்வர், ஸ்மோக் க்ரே மற்றும் டீப் இம்பேக்ட் புளூ ஆகிய 7 வெளிப்புற வண்ணங்களில் கிடைக்கும்.

     பெட்ரோல் விலை விபரம்

    பெட்ரோல் விலை விபரம்

    1.2லி பெட்ரோல் - விலை விபரம்

    பேஸ் - ரூ.4.29 லட்சம்

    ஆம்பியன்ட் - ரூ.4.56 லட்சம்

    ட்ரென்ட் - ரூ.5.0 லட்சம்

    ட்ரென்ட் ப்ளஸ் - ரூ.5.25 லட்சம்

    டைட்டானியம் - ரூ.5.75 லட்சம்

    டைட்டானியம் ப்ளஸ் - ரூ.6.40 லட்சம்

    1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் விலை

    டைட்டானியம் - ரூ.6.40 லட்சம்

    டீசல் மாடல் விலை விபரம்

    டீசல் மாடல் விலை விபரம்

    பேஸ் - ரூ.5.29 லட்சம்

    ஆம்பியன்ட் - ரூ.5.62 லட்சம்

    ட்ரென்ட் - ரூ.5.97 லட்சம்

    ட்ரென்ட் ப்ளஸ் - ரூ.6.22 லட்சம்

    டைட்டானியம் - ரூ.6.72 லட்சம்

    டைட்டானியம் ப்ளஸ் - ரூ.7.40 லட்சம்

    அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகள்

    விலை அதிகரிக்கும் வாய்ப்பு

    விலை அதிகரிக்கும் வாய்ப்பு

    இது அறிமுகச் சலுகை விலையாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, தீபாவளி பண்டிகை முடிந்தவுடன், புதிய ஃபிகோ காரின் விலை ஏற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
English summary
New Ford Figo hatchback launched in India starting at INR 4.30 lakh for the petrol variant and INR 5.30 lakh for the diesel, ex-showroom (Delhi).
Story first published: Wednesday, September 23, 2015, 14:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X