லம்போ சூப்பர் காருக்கு இணையான விலையில் புதிய ஃபோர்டு ஜிடி கார்!

Written By:

ஃபோர்டு ஜிடி ஸ்போர்ட்ஸ் காரின் விலை விபரம் வெளியிடப்பட்டிருக்கிறது. லம்போர்கினி அவென்டேடார் காருக்கு இணையான விலையில் இந்த புதிய தலைமுறை ஃபோர்டு ஜிடி கார் விற்பனைக்கு வந்திருக்கிறது.

இது ஆட்டோமொபைல் துறையினரையும், ஃபோர்டு ஜிடி காருக்காக காத்திருந்தவர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், முந்தைய தலைமுறை மாடலைவிட இரு மடங்குக்கும் கூடுதலான விலையில் இந்த புதிய காரின் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம்.

கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பழைய மாடல் விலை

பழைய மாடல் விலை

2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் முதல் தலைமுறை ஃபோர்டு ஜிடி கார் விற்பனை செய்யப்பட்டது. அந்த கார் 1.50 லட்சம் அமெரிக்க டாலர் விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், புதிய தலைமுறை மாடல் இதைவிட இருமடங்குக்கும் அதிகமான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 ஆச்சரியம் தந்த விலை

ஆச்சரியம் தந்த விலை

புதிய ஃபோர்டு ஜிடி சூப்பர் கார் 4 லட்சம் அமெரிக்க டாலர் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லம்போர்கினி அவென்டேடார் காருக்கு இணையான விலையில் புதிய ஜிடி காரை ஃபோர்டு விற்பனை செய்ய இருக்கிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

முதல் தலைமுறை மாடலில் மொத்தம் 4,000 ஃபோர்டு ஜிடி கார்கள் விற்பனை செய்யப்பட்டன. உற்பத்தி நிறுத்தப்பட்டவுடன், அந்த காருக்கான விைல மதிப்பு எக்கச்சக்கமாக எகிறியது. இதனை மனதில் வைத்தே புதிய தலைமுறை மாடலின் எண்ணிக்கையை மிகவும் குறைத்து, விலையை மிக அதிகமாக ஃபோர்டு நிர்ணயித்திருக்கிறது. எனவே, புதிய மாடலின் மதிப்பை வெகுவாக அதிகரிக்கும் பொருட்டே இவ்வாறு விலையை கணிசமாக உயர்த்தி ஃபோர்டு நிர்ணயித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், தொழில்நுட்பங்களிலும், எஞ்சின் ஆப்ஷன்களிலும் பல்வேறு மாற்றங்களை புதிய ஃபோர்டு ஜிடி கார் பெற்றிருப்பதும் ஒரு காரணம்.

ஈக்கோபூஸ்ட் எஞ்சின்

ஈக்கோபூஸ்ட் எஞ்சின்

இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரில் 591 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் 3.5 லிட்டர் ஈக்கோபூஸ்ட் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 0- 96 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 321 கிமீ வேகத்தில் செல்லும் கட்டமைப்பை பெற்றிருக்கும்.

லிமிடேட் எடிசன் மாடல்

லிமிடேட் எடிசன் மாடல்

அடுத்த ஆண்டு இந்த புதிய ஃபோர்டு ஜிடி சூப்பர் கார் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. மொத்தம் 250 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

கார்பன் ஃபைபர் பாகங்களால் எடை கணிசமாக குறைந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடல் இது. இதன் காரணமாக, எடைக்கும், சக்தியை வெளிப்படுத்தும் திறனுக்குமான விகிதாச்சாரத்தில் இது மிகச்சிறந்த கார் மாடல் என்று ஃபோர்டு தெரிவிக்கிறது. சிசர் கதவுகள், ஆக்டிவ் ஏரோடைனமிக்ஸ், ரேஸ் கார்களில் இருக்கும் புஷ்கார்டு சஸ்பென்ஷன் போன்றவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

விற்பனை

விற்பனை

இந்த புதிய ஃபோர்டு ஜிடி சூப்பர் கார் முதலில் அமெரிக்காவிலும், பின்னர் உலகின் பிற நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.

 
English summary
Ford has announced the price of its latest supercar, the Ford GT. The car will be priced around USD 400,000, which means that it is in the same range as the Lamborghini Aventador.
Story first published: Monday, March 9, 2015, 11:04 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark