எகோஸ்போர்ட்டுக்கு சிறப்பு கடனுதவி திட்டத்தை துவங்கியது ஃபோர்டு

ஃபோர்ட் இந்தியாவின் அங்கமான ஃபோர்டு கிரெடிட் இந்தியா, எகோஸ்போர்ட் கார் வாங்குவதற்காக பிரத்யேகமான கடனுதவி திட்டத்தை துவங்கியுள்ளது.

தொடர் பண்டிகைகாலங்களை ஒட்டி, பல்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு வகையான தள்ளுபடிகளையும், சலுகைகளையும் வழங்கி வருகின்றன.

தங்கள் நிறுவனம் சார்பாக, ஃபோர்ட் இந்தியாவும், முதன் முறையாக, நேரடியான ஃபைனான்சிங் வசதியினை வழங்குகிறது. ஃபோர்ட் கிரெடிட் இந்தியா மூலம், வாடிக்கையாளர்கள் இந்த ஃபைனான்சிங் வசதியினை பெற்று கொள்ளலாம்.

இந்த ஃபைனான்சிங் வசதி மூலம், தகுதியுடைய வாடிக்கையாளர்கள் 2015 ஃபோர்ட் எகோஸ்போர்ட் காரை, 8.99 சதவிகித வருடாந்திர வட்டி விகிதத்தில், 60 மாதங்கள் வரை நீட்டிக்ககூடிய வகையில் பெற்று கொள்ளலாம்.

Ford India Begins Financing and introduces Special Interest Rate On EcoSport

அதிக திறன், ஏராளமான அம்சங்கள் புதிய 2015 ஃபோர்ட் எகோஸ்போர்ட், 6,79,563 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைகிறது. இந்தியாவில் 2013-ஆம் ஆண்டு அறிமுகபடுத்தபட்ட ஃபோர்ட் எகோஸ்போர்ட், இந்தியா மற்றும் பிற நாடுகளில், இது வரை 2,00,000 லட்சத்திற்கும் கூடுதலான கார்கள் விற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

புதிய வாகனங்களுக்கான ஃபைனான்சிங்-கை ஃபோர்ட் கிரெடிட் இந்தியா, மார்ச் மாதத்தில் துவக்கியது. சில மாதங்கள் கழித்து, உபயோகிக்கப்பட்ட வாகனங்களுக்கான ஃபைனான்சிங்-கும் துவக்கபட்டது.

முதல் கட்டமாக, இந்த ரீடெய்ல் ஃபைனான்சிங் வசதியானது, டெல்லி, சண்டிகர், டெஹ்ராடூன், லூதியானா, ஜான்சி, ஆக்ரா, மோராதாபாத், அஹ்மதாபாத், மெஹ்சானா, ஜாம்நகர், பெங்களூர், சென்னை, கொச்சி, ஹைதராபாத், கயா, தன்பாத் மற்றும் துர்காபூர் உள்ளிட்ட 17 நகரங்களில் வழங்கபடுகிறது. இனி வரும் காலங்களில் இந்த ஃபைனான்சிங் வசதி, பிற நகரங்களில் உள்ள டீலர்ஷிப்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது.

ஃபோர்ட் நிறுவனத்தின் மதீப்பீடு படி, ஃபோர்ட் ஆசியா பசிஃபிக் பகுதிகளில், இந்தியா மிக முக்கியமான சந்தையாக விளங்குகிறது. இது வரை, முதலீடு செய்யப்பட்டுள்ள 2 பில்லியன் அமெரிக்க டாலர்களில், சுமார் பாதி அளவிலான (1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதலீடுகள், குஜராத்தில் உள்ள சானந்த் என்ற இடத்தில் செய்யப்பட்டுள்ளது.

சனந்த் என்ற இடத்தில் மார்ச் மாதம் துவக்கபட்ட உற்பத்தி மையத்தில், ஒரு ஆண்டிற்கு சுமார் 6,10,000 இஞ்ஜின்களும், 4,40,000 வாகனங்களும் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்த மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மையத்தின் மூலம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் எழும் தேவைகளை, ஃபோர்ட் நிறுவனம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என தெரிகிறது. இதோடு மட்டுமல்லாமல், ஃபோர்ட் நிறுவனம் தங்களின் விற்பனை நெட்வர்க்கள் மற்றும் சர்வீஸ் நெட்வர்க்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

Most Read Articles
English summary
Ford India Begins Financing and introduces Special Interest Rate On EcoSport. Ford Credit India launches its first special financing program in time for the festive season. Qualified customers may finance 2015 Ford EcoSport for an 8.99 percent annual percentage rate up to 60 months.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X