அடுத்த 9 மாதங்களில் 3 புதிய கார் மாடல்கள்: ஃபோர்டு தகவல்

Written By:

அடுத்த 9 மாதங்களில் 3 புதிய கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபோர்டு கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நடந்து வரும் மீடியா டிரைவ் நிகழ்வின்போது, இந்த தகவலை ஃபோர்டு அதிகாரி ஒருவர் வெளியிட்டார்.

Ford Aspire
 

3 புதிய கார் மாடல்களில் முதலாவதாக, ஃபோர்டு ஆஸ்பயர் கார் வருகிறது. இரண்டாவதாக, ஃபோர்டு ஹேட்ச்பேக் கார் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் புதிய எண்டெவர் எஸ்யூவியை ஃபோர்டு அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

இந்த புதிய மாடல்கள் மூலமாக ஃபோர்டு கார் நிறுவனத்தின் விற்பனை நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும், மஸ்டாங் காரையும் ஃபோர்டு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #ஃபோர்டு #ford #auto news
English summary
American automobile giant, Ford has huge plans for India during 2015. They will be introducing three all-new products to the market during 2015.
Story first published: Wednesday, July 15, 2015, 9:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark