புது ஈக்கோஸ்போர்ட்டில் டெயில்கேட்டிலிருந்து ஸ்பேர் வீலை கழற்றும் ஃபோர்டு!

Written By:

இந்தியா உள்பட சர்வதேச அளவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு மிகப்பெரிய வரவேற்பு தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் இடைக்காலத்திற்கான மாற்றங்களை ஃபோர்டு செய்துள்ளது.

புதுப்பொலிவு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த புதிய மாடல் தற்போது ஐரோப்பாவில் வைத்து டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய மாடலில் பின்புற கதவில் இருக்கும் ஸ்பேர் வீலை கழற்றப்பட்டுள்ளது.

Ford Ecosport
 

இதனால், மேம்படுத்தப்பட்ட மாடலில் பின்புற கதவில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டிருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டிருந்த இடத்தில் தற்போது நம்பர் பிளேட்டை பொருத்தியிருக்கிறது ஃபோர்டு கார் நிறுவனம்.

புதிய ஈக்கோஸ்போர்ட் மாடலின் எஞ்சின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போது விற்பனையில் இருக்கும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

English summary
Ford will be omitting the spare wheel on the boot door as a 2015 update. Customers can opt for the spare wheel as well at no additional cost. In our opinion we prefer having the stylish alloy wheel showcased at the rear.
Story first published: Saturday, January 24, 2015, 16:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark